Chennai Latest News Updates: சென்னை ஈசிஆர் சாலையில் பெண்கள் சென்ற காரை, திமுக கொடி கட்டிய கார் ஒன்றில் இளைஞர்கள் துரத்தி சென்று வழிமறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
வன்னிய மக்களுக்கு வரலாற்றில் இல்லாத துரோகத்தை செய்தவர் முதலமைச்சர் மு க ஸ்டாலின் என்று சேலத்தில் நடைபெற்ற பாமக கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பரபரப்பு பேச்சு.
எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு மக்களைப் பற்றி கவலையில்லை என்றும், எதிர்க்கட்சித் தலைவர்கள் குறைகளை மட்டுமே சொல்கின்றனர் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்தார்.
வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவை இறுதி செய்தது நாடாளுமன்றக் கூட்டுக்குழு; வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து நீதிமன்றம் செல்வோம் என திமுக எம்பி ராசா தகவல்.
பொதுமக்கள் உரிமை நிலை நாட்ட அரசின் கவனத்திற்கு கொண்டு வர அமைதியான முறையிலே சிறு தூசு கூட யாருக்கும் இடையூறு இல்லாமல் போராட்டங்கள் நடந்தினால் வழக்கை தொடுப்பது என்பது எந்த வகையிலே நியாயம்? அதிமுக ஆர்.பி.உதயகுமார் கேள்வி.
திமுக கட்சியினரை தூண்டிவிட்டால் சீமான் சீமானாகப் போக முடியாது, கோமணம் இல்லாமல் போவார் ஜாக்கிரதை என்று சீமானுக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி எச்சரிக்கை.
துணை முதலமைச்சர் உதயநிதி பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் புடவை தருவதாகக் கூறி அழைத்து வரப்பட்ட பெண்களுக்கு எதுவும் தராமல் திருப்பி அனுப்பியதால் ஏராளமான பெண்கள் ஏமாற்றமடைந்தனர்.
எம்ஜிஆரின் 108 வது பிறந்தநாளை முன்னிட்டு நல திட்டங்கள் உதவி வழங்கும் விழா அதிமுக சார்பில் ஆர் எஸ் ராஜேஷ் தலைமையில் கொருக்குப்பேட்டையில் நடைபெற்றது. இதில் நடிகை கௌதமி கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு வழங்கினார்.
கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் தகுதிபெறும் அனைத்து விண்ணப்பதாரர்களும் அடுத்த மூன்று மாதங்களுக்குள் ரூ. 1,000 உரிமையைப் பெறுவார்கள் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Vijay Speech: இன்று பரந்தூர் சென்ற தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் திமுக அரசை கடுமையாக விமர்சித்து பேசி உள்ளார். மீண்டும் பரந்தூர் வருவேன் என்றும் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.