'தந்தை - மகன் - பேரன்' என, குடும்ப ஆட்சி நடத்தி வரும் திமுக இப்போது 'கொள்ளுப் பேரனையும்' களமிறக்க தாயாராகி விட்டது. 'ஒரே குடும்பம்' தான் திமுகவின் ஒரே கொள்கை என்று வானதி ஸ்ரீனிவாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மைனாரிட்டி இடமிருந்து வாக்கு வேண்டும் என்பதற்காக அதிமுக பாஜகவை விட்டு பிரிந்தது, நாம் நாமாக இருந்தால் இந்துக்கள் மட்டுமல்ல இஸ்லாமியர்கள் அனைவருமே ஆதரவு தருவார்கள் - அண்ணாமலை மதுரையில் பேட்டி.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்புமனுத்தாக்கல் நிறைவடைந்தது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியை சேர்ந்த 4 வேட்பாளர்கள் உட்பட 58 வேட்பாளர்கள் என மொத்தம் 65 வேட்புமனு தாக்கல் செய்து இருப்பதாக தேர்தல் நடத்தும் அலுவலர் மனிஷ் தெரிவித்துள்ளார்.
வரும் ஜனவரி 20ம் தேதி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பரந்தூர் மக்களை சந்திக்க காவல்துறை அனுமதி அளித்துள்ளது. மேலும் இதற்காக சில கட்டுப்பாடுகள் விஜய்க்கு விதிக்கப்பட்டுள்ளன.
பல்லடம் அருகே திருமணத்தை மீறிய உறவால் திமுக ஊராட்சி மன்ற துணைத் தலைவரை ஊர்மக்கள் கட்டி வைத்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது? இந்த சம்பவத்திற்கான பின்னணி என்ன என்பதை தற்போது காணலாம்...
தந்தை பெரியாரை சீமான் விமர்சித்திருப்பதை மக்களிடம் தெரிவிக்க வேண்டிய விஷயம் தான். இதுகுறித்து நாங்கள் கருத்து சொல்ல விரும்பவில்லை என்றார் அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில், பாஜக போட்டியிடவில்லை என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
மக்களை நம்பவைத்து ஏமாற்ற வேண்டும் என்பதுதான் ஆட்சியாளர்களின் எண்ணம் என குற்றம்சாட்டியுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், நீட் அதற்கு சான்று என தெரிவித்துள்ளார்.
தந்தை பெரியார் வழியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு கொண்டு வருவதாக உதகையில் நடந்த அரசு விழாவில் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா பேச்சு.
Murasoli, Seeman | தந்தை பெரியாரை கொச்சைப்படுத்தி பேசிய சீமான் மீது திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளது. சீமான் பெயரை நேரடியாக குறிப்பிடாமல், பெரியாரை விமர்சித்த கழிசடை, புதுப் பிராணி என விளாசியுள்ளது.
Erode East by election | ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் திமுக வேட்பாளராக சந்திரக்குமார் போட்டியிடுவார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதிமுக தேர்தலை புறக்கணிக்கிறது என அறிவிப்பு
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.