Weight Loss Journey: உடல் பருமன் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்கள் உடல் எடையை குறைக்க பலரின் அனுபவத்தை கேட்டிருப்பார்கள். ஆனால், ஒவ்வொருவரின் முயற்சியும், பயிற்சியும் அதிகம் மாறுபடுவதையும் பார்த்திருப்பீர்கள். ஆனால் தொடர்ச்சியான செயல்பாடுகள் மட்டுமே உடல் எடையை குறைக்கும் தாரக மந்திரம் என்பதை புரிந்துகொள்வதும் அவசியமாகிறது.
Weight Loss Journey: நிபுணரின் ஆலோசனை தேவை
நீங்களும் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருக்கிறீர்கள் என்றால், நிச்சயம் உடல் எடையை குறைத்தவர்களின் அனுபவங்களையும், அறிவுரைகளயும் கேளுங்கள். ஆனால், அவற்றை நிச்சயம் பின்பற்ற வேண்டுமா என்றால், தகுந்த மருத்துவ நிபுணரை சந்தித்து உங்கள் உடல்நிலைக்கு ஏற்ப உடல் எடையை குறைப்பதுதான் சரியான அணுகுமுறையாக இருக்கும்.
Weight Loss Journey: 6 மாதங்களில் 25 கிலோவை குறைத்த பெண்
அந்த வகையில், டெல்லியை சேர்ந்த சாக்ஷி யாதவ் என்ற பெண் 6 மாதக்கால கடின உழைப்பாலும், தொடர்ச்சியான முயற்சியாலும் சுமார் 25 கிலோ உடல் எடையை குறைத்துள்ளார். ஒரே மாதத்தில் உடல் பருமனை விரட்ட வேண்டும் என நினைத்தால் அது தவறானதாகும். நீண்ட கால திட்டமிடலுன் எளிமையாகவும், தொடர்ச்சியாகவும் முயற்சி எடுத்தாலே உடல் கட்டுக்கோப்புடன் மாறும் என்பது சாக்ஷி யாதவ் ஒரு உதாரணமாக இருக்கிறார்.
Weight Loss Journey: ஜிம்மிற்கே செல்லாத சாக்ஷி யாதவ்
மேலும் உடல் எடை குறைப்பில் சாக்ஷி யாதவ் ஜிம் வாசற்படியை கூட தொடவில்லையாம். தினசரி உணவுப்பழக்கவழக்கத்தில் கட்டுப்பாட்டுடன் இருந்தது மட்டுமின்றி அன்றாட செயல்பாடுகளை தொடர்ந்து செய்து உடல் நலனையும், தன்னம்பிக்கையையும் வளர்த்ததாக அவர் கூறுகிறார். உடல் எடையை குறைக்க அவர் என்னென்ன செய்தார் என்பதை இங்கு விரிவாக காணலாம்.
Weight Loss Journey: தூக்கம் தேவை
உடல் எடை குறைப்பு முயற்சியில் தூக்கத்திற்கு பெரிய பங்கு இருக்கிறது எனலாம். எனவே நீங்கள் நன்றாக தூங்க வேண்டும்.. இரவில் நீங்கள் குறைந்தது 7 மணிநேரம் தூங்கினால் மட்டுமே உடலில் ஹார்மோன் சமநிலையில் இருக்கும், வளர்ச்சிதை மாற்றம் மற்றும் பசி உள்ளிட்டவையும் சீராக இருக்கும். போதிய தூக்கமில்லை என்றால் தேவையற்ற நேரங்களில் பசி எடுக்க வைக்கும், வளர்ச்சிதை மாற்றத்தை மெதுவாக்கும். இது உடல் எடையை குறைப்பை பாதிக்கும்.
Weight Loss Journey: புரதமும், நார்ச்சத்தும்...
தினமும் புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளுங்கள். இவற்றை அதிகமாக எடுத்துக்கொள்வதன் மூலம் நீண்ட நேரத்திற்கு பசி எடுக்காது. முட்டை, இறைச்சிகள், பருப்புகள், முழு தானியங்கள் ஆகியவற்றில் புரதச்சத்தும், நார்ச்சத்தும் அதிகம் இருக்கின்றன. இவை செரிமானத்திலும், தசை வளர்ச்சியிலும் உங்களுக்கு உதவிகரமாக இருக்கும்.
Weight Loss Journey: தினமும் 10 ஆயிரம் ஸ்டெப்ஸ் நடங்க
நடைப்பயிற்சியும், ஓட்டப்பயிற்சியும் உடல் எடை குறைப்பு செய்யாவிட்டாலும் அனைவரும் செய்ய வேண்டிய ஒன்றாகும். உங்களால் பெரியளவில் கடுமையாக உடற்பயிற்சி செய்ய முடியாவிட்டால் தினமும் 10 ஆயிரம் ஸ்டெப்ஸ் நடப்பதை இலக்காக வைத்துக்கொள்ளுங்கள்.
நடைப்பயிற்சி உடன் ஓட்டப்பயிற்சியும் சேர்ந்தால் நல்லது. ஸ்கிப்பிங், சைக்கிளிங், நீச்சல் பயிற்சி ஆகியவையும் கைக்கொடுக்கும். இவை அனைத்தும் உங்களின் கலோரிகளை கரைக்க உதவும், இதயத்திற்கு நல்லது. உடல் சுறுசுறுப்பாகவும் இருக்கும். அதேபோல், ஜிம் செல்லவில்லை என்றாலும் தீவிரமான உடற்சிபயிற்சிகளை தொடர்ந்து செய்ய வேண்டும். தம்பிள்ஸ் உள்ளிட்டவற்றை வைத்து வீட்டிலேயே தினமும் பயிற்சி செய்வாராம் சாக்ஷி யாதவ்.
Weight Loss Journey: தண்ணீர் குடிப்பதும் அவசியம்
தினமும் 3-4 லிட்டர் தண்ணீர் குடிப்பதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள். இது செரிமானத்திற்கு உதவுவது மட்டுமின்றி தேவையற்ற நச்சை உடலில் இருந்து வெளியேற்றவும் உதவும். மேலும், பசியை கட்டுப்படுத்தும். தேவையற்ற பசியினால் அதிக கலோரிகளை உட்கொள்ள நேரிடும். எனவே, சரியான அளவில் தண்ணீர் குடிப்பது வளர்ச்சிதை மாற்றத்தை சீராக வைத்து, உடல் எடையை குறைக்க உதவும்.
Weight Loss Journey: பழங்களை சாப்பிடுங்கள்
உங்களின் அன்றாட உணவுப்பழக்கவழக்கத்தில் பழங்களை சேர்த்துக்கொள்ளுங்கள். அவை உங்களுக்கு வைட்டமிண், ஆண்டிஆக்ஸிடன்ட்ஸ் மட்டுமின்றி நார்ச்சத்தையும் அளிக்கிறது. ஆரஞ்சு, ஆப்பிள், பெரீஸ் ஆகியவை வளரச்சிதை மாற்றத்தை வேகப்படுத்துவது மட்டுமின்றி, வயிறை நிறைவாக வைத்திருக்கும், அதிக கலோரிகளை எடுத்துக்கொள்வது தடுக்கப்படும். செரிமானமும் சீராக நடக்கும்.
Weight Loss Journey: தொடர்ச்சியாக செய்ய வேண்டும்
இவை அனைத்தையும் தன்னம்பிக்கையுடன் நீண்ட கால திட்டமிடலுடன் செய்துகொண்டே இருக்க வேண்டும். ஒரு வாரம் அல்லது ஒரு மாதம் இவற்றை கடைபிடித்துக்கொண்டு அதன்பின் எதிர்பார்த்த பலன் இல்லை என கூறியோ, நம்பிக்கையின்றியோ இதனை கைவிட்டுவிடக்கூடாது. நீங்கள் தொடர்ச்சியாய் மிகவும் நம்பிக்கையுடன் இதனை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் சாக்ஷி யாதவ்வின் உடல் எடை குறைப்பு அனுபவம் ஆகும். இதனை பின்பற்றும் முன் நீங்கள் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும் என்பதை மறக்காதீர்கள். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை)
மேலும் படிக்க | 7 மாதங்களில் 32 கிலோ குறைத்த இன்ஸ்டா பிரபலம்! அவரே கொடுத்த 10 டிப்ஸ்..
மேலும் படிக்க | 73 வயதிலும் இளமையாக இருக்கும் நடிகை!! தினமும் சாப்பிடும் ஒரே வறுத்த உணவு..
மேலும் படிக்க | இரவு நேரத்தில் சாப்பிட்டால் பிரச்சனை தரும் உணவுகளின் பட்டியல்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ