Tips To Become The First Millionaire In Your Family : நம் குடும்பத்தின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் பணக்காரராக, நாம் இருக்க வேண்டும் என்கிற ஆசை நம்மில் பலருக்கு இருக்கும். அந்த ஆசையில் எந்த தவறும் இல்லை என்றாலும், நாம் அதற்காக சில தியாகங்களை செய்ய வேண்டியிருக்கிறது. அவை என்னென்ன தெரியுமா?
பற்றாக்குறை மனநிலை:
பணக்காரன் ஆக வேண்டும் என்றால் முதலில் நம்மிடம் எது இல்லையோ அதைப்பற்றி யோசிப்பது நிறுத்த வேண்டும். இதனால் பல சமயங்களில் நாம் துணிச்சலுடன் சில செயல்களில் இறங்க தவறிவிடுவோம். இதனால் நம்மிடம் வரும் வாய்ப்புகளும் நழுவி சென்றுவிடும். எனவே எப்போதும் நீங்கள் ஒரு முதலீடு குறித்து யோசிக்கும் போது அதிலிருந்து உங்களுக்கு கிடைக்கும் லாபம் குறித்து யோசிக்க வேண்டும்.
ஒப்பீடு:
உங்களுடன் பழகியவர்களை அல்லது படித்தவர்களை பார்க்கும்போது அவர்கள் உங்களைவிட பெரிய இடத்தில் இருந்தால் கண்டிப்பாக அவருடன் உங்களை ஒப்பிட்டு பார்ப்பீர்கள். இந்த மன நிலையும் உங்களை முன்னேற விடாமல் செய்துவிடும். எனவே எப்போதும் உங்களுடன் உங்களை நீங்களே ஒப்பிட்டு பார்த்துக் கொள்ள வேண்டும். நேற்று எப்படி இருந்தீர்கள்? இன்று அதைவிட ஒரு படி மேலே இருக்கிறீர்களா என்பதே உங்களது முன்னேற்றக் குறிக்கோளாக இருக்க வேண்டும். இதனால் நீங்கள் வளர்ச்சி அடைவதோடு நல்ல மனமுதிர்ச்சி பெற்ற மனிதராகவும் மாறுவீர்கள்.
முதன்மைப்படுத்துதல்:
எப்போதும் பிஸியாக இருப்பவர்கள், ஒன்று தங்களை அப்படி காண்பித்துக் கொள்வார்கள், அல்லது வேறு யாருக்காகவாவது பிசியாக இருப்பார்கள். எனவே எந்த வேலையை உங்களுக்காக நீங்கள் முதன்மைப்படுத்துகிறீர்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இதுவரை வெற்றி பெற்ற பல தொழிலதிபர்கள் தங்களின் முன்னேற்றத்திற்கு உதவும் வேலைகளை மட்டுமே முதன்மைப்படுத்தி முன்னேறி இருக்கின்றனர்.
தெளிவாக முடிவெடுக்க முடியாமல் இருப்பது:
நாம் செய்யும் விஷயம் சரியாக இருக்குமா? இது ஒர்க் அவுட் ஆகுமா என்று யோசித்து யோசித்தே பலர் பல விஷயங்களை கோட்டை விட்டுவிடுகின்றனர். எனவே எந்த முடிவு எடுத்தாலும் அதில் உங்கள் மனதிற்கு எது சரியாகப்படுகிறது அந்த ஆப்ஷனை தேர்ந்தெடுக்க வேண்டும். எப்படி தெளிவாக முடிவெடுக்கும் திறன் இல்லாமல் இருப்பது உங்களை பின்னோக்கி தள்ளிவிடும்.
தினசரி பழக்கங்கள்:
நீங்கள் பணக்காரராக நினைப்பதெல்லாம் சரிதான், ஆனால் அதற்கு நீங்கள் தினசரி முயற்சிகளை மேற்கொள்கிறீர்களா என்பதையும் பார்க்க வேண்டும். நிதி பகுப்பாய்வு குறித்த அறிவை வளர்த்து கொள்வது, முதலீட்டு திட்டங்கள் குறித்து பார்ப்பது உள்ளிட்ட விஷயங்கள் குறித்த அறிவைக் கொண்டிருக்கிறீர்களா என்பதை பார்க்க வேண்டும். உங்கள் தினசரி பழக்கமே வெற்றிக்கு வழிகாட்டியாகவும் இருக்கும்.
அதிக செலவுகள்:
ஒரு வழியாக நமது நிதிநிலை கொஞ்சம் கொஞ்சமாக உயரும்போது, அதனை வெளி உலகத்திற்கு காட்ட வேண்டும் என நினைப்போம். ஆனால் அப்படி செய்வதால் இன்னும் நீங்கள் பின்னோக்கி நகர்வீர்கள். உண்மையாகவே உங்களின் நிதி நிலையில் மாற்ற வேண்டும் என நினைக்கும் போது பிறருக்காக செய்யும் அதிக செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.
தோல்விகளில் இருந்து கற்றாமை:
தோல்விகள் என்பது நம் வாழ்வில் கிடைக்கும் பாடங்கள் என யார் சொன்னாலும் நமக்கு புரியாது. உங்கள் தோல்விகளை, வெற்றிப்படிகளாக பார்த்து, அதிலிருந்து சில விஷயங்களை கற்றுக்கொண்டு முன்னேற வேண்டும். அப்போதுதான், உங்களால் உங்கள் குடும்பத்தின் முதல் பணக்காரர் ஆக மாற முடியும்.
மேலும் படிக்க | அழகு முக்கியமில்லை..‘இந்த’ 7 குணங்கள் இருந்தா வசீகரமா இருப்பீங்க..
மேலும் படிக்க | உங்களிடம் இந்த 2 ரூபாய் நோட்டு இருக்கிறதா? 5 லட்சம் வரை சம்பாதிக்காலம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ