உடல் எடையை குறைக்க உதவும் தென்னிந்திய உணவுகள்!

உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு தென்னிந்திய உணவுகள் உதவுகிறது. அது குறித்து இங்கு பார்க்கலாம். 

இன்றைய காலத்தில் அதிக உடல் உழைப்பு இல்லாததால் பலருக்கு உடல் எடை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால் சரியான உணவு முறைகளை நாம் கடைபிடித்தால் நமது உடல் எடையை நம்மால் குறைக்க முடியும். குறிப்பாக நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் தென்னிந்திய உணவுகளே இதற்கு உதவுகிறது. அது குறித்து இத்தொகுப்பில் பார்க்கலாம். 

1 /6

தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான உணவுகளில் ஒன்று இட்லி. இதனை வேக வைத்து தயாரிப்பதால் மிகவும் ஆரோக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இட்லியில் வெறும் 39 கலோரிகளே உள்ளதால் உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு இது சிறந்த உணவாகும்.  

2 /6

பருப்பு மற்றும் காய்கறிகளை கொண்டு தயாரிப்பதால் சாம்பாரில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் உள்ளன. கலோரிகள் குறைவாக இருப்பதால் உடல் எடையை குறைக்க எடுத்துக்கொள்ளலாம். இதனை இட்லி போன்ற டிபன்கள் மற்றும் சாதத்துடன் சேர்த்து உட்கொள்ளலாம்.

3 /6

ரசமானது புளி மற்றும் தக்காளியை கொண்டு தயாரிக்கப்படுகிறது. ஒரு கப் ரசத்தில் 60 கலோரிகள் உள்ளன. இது செரிமானத்திற்கு மிகவும் நல்லது என்பதுடன் உடல் எடையை குறைக்க உதவுகிறது. இதனை சூப்பாகவோ அல்லது சாதத்துடன் உட்கொள்ளலாம். 

4 /6

ரவையை கொண்டு தயாரிக்கப்படும் உப்புமா மிகவும் ஆரோக்கியமான உணவுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் உப்புமாவை எடுத்துக்கொள்ளலாம். ஒரு கப் 200 கலோரிகள் உள்ளன. 

5 /6

இட்லியை போலவே, தோசையும் அரசி மற்றும் உளுந்தில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இதனை சாம்பார் உடன் சேர்த்து உட்கொண்டால் நல்லது. உடல் எடையை குறைக்க நினைத்தவர்கள் இதனை உட்கொள்ளலாம். அதேபோல் அதிக எண்ணெண் ஊற்றி தேசையை செய்யாமல், எண்ணெண்யை குறைவாக பயன்படுத்த வேண்டும்.  

6 /6

(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான கருத்துக்களே ஆகும். இதனை பின்பற்றும் முன் உரிய மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை)