மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். அந்த சட்டங்களால் விவசாயிகளின் வாழ்வதாரம் பாதிக்கப்படும் எனக்கூறி, கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக லட்சக்கணக்காண விவசாயிகள் தேசிய தலைநகரம் டெல்லி எல்லையில் (Delhi Border) போராட்டம் செய்து வருகின்றனர்.
தலைநகர் தில்லியில் குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணியின் போது நடந்த வன்முறைகள் மற்றும் செங்கோட்டையில் காலிஸ்தான் கொடியை ஏற்றி சம்பவம், உள்நாட்டில் மட்டுமல்ல, வெளிநாட்டிலும் ஒரு பேசு பொருளாக மாறியுள்ளது. நாட்டை அவமானப்படுத்தும் வகையிலான இந்த சம்பவத்திற்குப் பிறகு, செங்கோட்டையில் ஏராளமான பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
காங்கிரஸ் கட்சியினர் விவசாயிகளை நலனை கருத்தில் கொள்ளாமல், சுய லாபத்திற்காக, விவசாயிகளைத் தூண்டிவிட்டு போராட வைக்கின்றனர் என உள்துறை அமைச்சர் குறிப்பிட்டார்.
உள்துறை அமைச்சரும், பாரதிய ஜனதா கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவருமான அமித் ஷா பொங்கல் சமயத்தில் தமிழ்நாடு வர திட்டமிட்டிருந்தார். அவர் துக்ளக் பத்திரிகையின் ஆண்டு விழாவில் பங்கேற்பதற்காக வருவதாக திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் அமித் ஷா (Amit Shah) சென்னை வரவில்லை என்றும் அவரது தமிழ்நாடு பயணம் ரத்து செய்யப்படுவதாகவும் திடீர் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேற்கு வங்க தேர்தலுக்கான மாஸ்டர் ப்ளானுடன் பாஜக களத்தில் இறங்கியுள்ளது. பல தலைவர்களுக்கு வெவ்வேறு பகுதிகளின் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இது தவிர, 7 பேர் கொண்ட சிறப்பு குழு டெல்லியில் இருந்து அனுப்பப்படுகிறது.
ரூ.971 கோடி செலவில் கட்டப்பட உள்ள புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி (Prime Minister Narendra Modi). புதிய நாடாளுமன்ற கட்டிடம் (New Parliament Building) தன்னம்பிக்கை கொண்ட இந்தியாவை நிர்மாணிப்பதற்கான சாட்சியாக மாறும் என்றார்.
2020 கொந்தளிப்பான ஆண்டாகும், COVID-19 தொற்றுநோயிலிருந்து தொடங்கி, பொருளாதாரத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி, பாலிவுட்டின் மிகவும் திறமையான நடிகர்களில் ஒருவரான சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் என பல விஷயங்கள் அதிகம் தேடப்பட்டன. இவை அனைத்தையும் பிணைப்பது என்றும் மாறாத அரசியல்.
பத்தாவது நாளாக தொடரும் விவசாயிகளின் போராட்டம் வட மாநிலங்களில் வாட்டும் குளிருக்கு மத்தியில் சூடு பிடித்துள்ளது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு (farm bills) எதிராக ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நரேந்திர மோடி முதல் ராகுல் காந்தி வரை : 2020 ஆம் ஆண்டில் இந்தியாவில் அதிகம் இணையதளத்தில் அதிகம் தேடப்பட்ட 10 அரசியல்வாதிகளின் பட்டியலை Yahoo வெளியிட்டுள்ளது.
‘எல்லாவற்றையும் மாற்றுவோம்’ மற்றும் ‘இப்போது இல்லாவிட்டால் ஒருபோதும் இல்லை’ என்ற ஹேஷ்டேக்குகளுடன் அரசியல் கட்சி தொடங்கவிருக்கும் செய்தியை ரஜினி ட்வீட் செய்திருந்தார். ரஜினியின் அறிவிப்பும், அதன் பின்னணியும் என்ன?
கிரேட்டர் ஹைதராபாத் முனிசிபல் கார்ப்பரேஷன் (GHMC) தேர்தலுக்கான பாஜக பிரச்சாரத்தில் பங்கேற்பதற்கு முன்பு வரலாற்று சிறப்பு மிக்க சார்மினாரை ஒட்டியுள்ள பாக்யலட்சுமி கோவிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா (Amit Shah) ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனை செய்தார். டிசம்பர் 1 ம் தேதி நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரச்சாரம் ஞாயிற்றுக் கிழமை மாலை முடிவடைகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.