அம்மா நாம்மொடு இல்லை. அம்மா இடத்தில் தற்போது மோடி உள்ளார். அம்மாவின் பெயரைச் சொல்லி பொதுமக்களை எடப்பாடி ஏமாற்றி வருகிறார் என ஸ்ரீவைகுண்டத்தில் டிடிவி தினகரன் பேச்சு.
மத்தியில் உள்ளவர்களிடம் கூட்டு வைத்தால் அவர்கள் கொண்டுவரும் தமிழகத்திற்கு விரோதமான சட்டங்களுக்கு ஆதரவளிக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்பதால்தான் நாம் தனித்துப் போட்டியிடுகிறோம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது என 2015 ஆம் ஆண்டு ஆர்டிஐ கேள்விக்கு பதில் கொடுத்திருக்கிறீர்களே என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கருக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
தோல்வியின் விளிம்பில் ஸ்டாலின் உள்ளதாகவும் தோல்வி பயம் அவர்களைப் பற்றிக் கொண்டதாகவும் விமர்சித்துள்ள எல்.முருகன், அவர்கள் வீட்டுக்குச் செல்லும் நேரம் வந்துவிட்டது என கூறினார். நீலகிரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தேர்தல் பறக்கும் படையினர் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக தெரிவித்தார்.
பொய்யை மட்டுமே சொல்லி மதவாத அரசியலை திணித்து நாட்டை கூறு போடும் பாஜகவை அகற்ற திமுகவிற்கு வாக்களிக்க வேண்டும் என தெரிவித்து நீலகிரி திமுக வேட்பாளர் ஆ.ராசா தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
Edappadi Palanisamy Attacks BJP: பாஜகவை தமிழ்நாட்டில் அடையாளம் காட்டியதே ஜெயலலிதா தான் என அதிமுகவை விமர்சித்த பாஜகவின் ராம ஸ்ரீனிவாசனுக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்தார்.
1999ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தபோது பாஜகவில் பாசிசம் உள்ளது தெரியவில்லையா? என்று குமரி நாடாளுமன்ற பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார் .
TN CM MK Stalin Campaign: பாஜக ஆளும் மாநிலங்களில்தான் நாட்டிலேயே போதைப் பொருள் அதிகம் விற்பனையாகிறது என்று ஒரு புள்ளிவிவரம் வந்திருக்கிறது என முதலமைச்சர் ஸ்டாலின், பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
Demonetization BV Nagaratna: மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு ஆட்சேபனை தெரிவித்து உச்ச நீதிமன்ற நீதிபதி பி.வி. நாகரத்னா கருத்து தெரிவித்துள்ளார்.
SP Velumani, AIADMK: தேசிய அளவில் வேண்டுமானால் பெரிய கட்சியாக பாஜக இருக்கலாம், தமிழ்நாட்டில் அதிமுக தான் பெரிய கட்சி என அதிமுக தலைமை நிலைய செயலாளர் எஸ்பி வேலுமணி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்த ஜிஎஸ்டியினாலும், மாநில அரசு மின் கட்டணத்தை உயர்த்தியதாலும், கோவையில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் நலிவடைந்துள்ளதாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரத்தின்போது குற்றம் சாட்டினார்.
திமுக தேர்தல் வாக்குறுதிகளில் 20 சதவீதம் கூட நிறைவேற்றாமல் 99 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக பொய் பேசி வருவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
அலைக்கற்றை ஏலத்தில் முறைகேடு எனக் கூறிவிட்டு, அதே அலைக்கற்றையை தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்த்து பாஜக தேர்தல் நிதி பெற்றுள்ளதாக நீலகிரி தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசா குற்றம் சாட்டியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.