Udhayanidhi Stalin vs Annamalai Latest News Updates: சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த 2,500 பயனாளிகளுக்கு வீட்டுமனைக்கான பட்டாக்களை வழங்கும் விழா செனாய் நகரில் உள்ள விங்ஸ் கன்வென்ஷன் சென்டரில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு பயனாளர்களுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பட்டா வழங்கினார்.
Udhayanidhi Stalin: 'முதல்வரின் வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பு'
தொடர்ந்து விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின் (Udhayanidhi Stalin), "திராவிட மாடல் அரசு என்றால் என்ன என்று சிலர் கேட்கின்றனர். அவர்களுக்கு இங்கே பதில் சொல்கிறேன். இன்னாருக்கு மட்டும் இது என்று இருந்ததை 'எல்லோருக்கும் எல்லாம்' என்பதுதான் திராவிட மாடல். இந்த இலக்கை நோக்கியே முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அமைச்சரவை கூட்டத்தில் முதலமைச்சர் (Tamil Nadu CM MK Stalin) சிறப்பாக அறிவுறுத்தி இருந்தார்.
பட்டா இல்லாத 63 ஆயிரம் மக்களுக்கு 6 மாதத்தில் பட்டா வழங்க வேண்டும் என அமைச்சரவை கூட்டத்தில் முதலமைச்சர் வலியுறுத்தி இருந்தார். சென்னை மற்றும் சென்னையை சுற்றியுள்ள 4 மாவட்டங்களில் மட்டும் 29 ஆயிரத்து 187 பேருக்கு பட்டா வழங்கப்பட உள்ளது. மதுரை, நெல்லை மாவட்டங்கள், மாவட்ட தலைநகர பகுதிகளில் மட்டும் 57 ஆயிரத்து 84 பேருக்கு பட்டாக்கள் வழங்கப்பட உள்ளது. ஏறத்தாழ 86,000 பட்டாக்களை வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கூட்டத்தில் அறிவித்திருக்கிறார். இது தமிழ்நாட்டின் வரலாற்றில் நிலைத்து நிற்கப் போகின்ற ஒரு நடவடிக்கை என்பதில் எந்த மாற்றுக் கருத்துமில்லை.
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசு அமைந்தது முதல், சென்னை உட்பட அத்தனை மாவட்டங்களிலும் பட்டா கோரிக்கையை நிறைவேற்றும் வண்ணம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பெல்ட் ஏரியாவில் வசிப்போருக்கு… pic.twitter.com/XiJOf7CMfa
— Udhay (@Udhaystalin) February 20, 2025
Udhayanidhi Stalin: 'அப்போ பட்டதாரி... இப்போ பட்டாதாரர்...'
தமிழ்நாட்டில் அனைவருக்கும் முகவரி கொடுத்த இயக்கம் திராவிட இயக்கம். திராவிட இயக்கம் இல்லாமல் போயிருந்தால் முகவரி இல்லாமல் கல்வி, வேலைவாய்ப்பற்ற மனிதர்களாகத்தான் இருந்திருப்போம். திராவிட இயக்கம் வந்த பிறகுதான் கல்வி, வேலைவாய்ப்பு தமிழ்நாடு தன்னிறைவு நிலையை அடைந்திருக்கிறது என்று சொல்லலாம்.
உங்கள் பிள்ளைகளை எல்லாம் பட்டதாரி ஆக்கிய திராவிட மாடல் இயக்கம் இன்று உங்களை பட்டாதாரர் ஆக்கியுள்ளது. திராவிட முன்னேற்ற கழகம் அரசு பொறுப்பேற்ற நான்கு ஆண்டுகளில் 12 லட்சத்திற்கு 29 ஆயிரம் பேருக்கு பட்டாக்களை வழங்கி சாதனை படைத்திருக்கிறது. 'அனைவருக்கும் வீடு' என்ற கலைஞரின் கனவை நனவாக்க நம்முடைய திராவிட மாடல் அரசும் முதலமைச்சரும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்கள்" என்றார்.
Udhayanidhi Stalin: 'அண்ணாமலையை அண்ணா சாலைக்கு வர சொல்லுங்கள்'
விழாவுக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின்,"2018ஆம் ஆண்டு சுவற்றை எல்லாம் உடைத்துக் கொண்டு திருட்டுத்தனமாக போனார். எங்கு பார்த்தாலும் GO BACK MODI, கருப்புக்கொடி காட்டுவது என்று இருந்தது. மக்களை சந்திக்க அஞ்சினார். அண்ணா அறிவாலயத்திற்கு வருவதாக சொன்னார், முடிந்தால் தைரியம் இருந்தால் அண்ணாசாலைக்கு முதலில் வர சொல்லுங்கள்.
நிதியை பெற்றுத்தர அவரால் ஏதாவது முடிந்தால் அதை செய்ய சொல்லுங்கள். தனியார் பள்ளி ஒன்றிய அரசிடம் அனுமதி பெற்று தான் நடத்தி வருகிறார்கள், சட்ட விரோதமாக அல்ல. தனியார் பள்ளியில் காலை உணவு அளிக்கிறார்களா? சீருடை வழங்குகிறார்களா? அதையும் இதையும் ஒப்பிடாதீர்கள்.
Udhayanidhi Stalin: வாரணாசியில் சிக்கிய மாற்றுத்திறனாளி வீரர்கள்
மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டி வாரணாசியில் நடந்தது. அவர்கள் பயணம் செய்ய டிக்கெட் புக் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் பயணம் மேற்கொள்ள பிரச்சனை இருப்பது தெரியவந்தது. முழுக்க முழுக்க காரணம் ஒன்றிய பாஜக அரசு கூட்டத்தை மேலாண்மை செய்யவில்லை.
விளையாட்டு வீரர்களுக்கு ரயில் கிடைக்கவில்லை என்று தகவல் காலையில் கிடைத்தது. உடனடியாக SDAT மூலம் அவர்களுக்கு விமான டிக்கெட் ஏற்பாடு செய்து உணவும் ஏற்பாடு செய்யப்பட்டது. இன்று மதியம் 12 மணிக்கு வாரணாசியில் இருந்து பெங்களூரு வருவார்கள், அங்கிருந்து விமானம் உள்ளது. கும்பமேளாவுக்கு சென்று திரும்ப முறையாக ரயில் சேவை இல்லாமல் மக்கள் திண்டாடுவதை பார்த்தோம். முறையான ரயில் சேவையை ஏற்படுத்தி தரவில்லை" என கூறியிருந்தார்.
"நீ சரியான ஆளாக இருந்தால்... உன் வாயில் இருந்து கெட் அவுட் மோடின்னு சொல்லிப்பாரு... எங்கப்பா சிட்டிங் முதலமைச்சர், தாத்தா ஐந்து முறை முதலமைச்சர், நான் துணை முதல்வர்னு... இன்னொரு முறை கெட் அவுட் மோடின்னு சொல்லிப்பாரு" என அண்ணாமலை (TN BJP President Annamalai), உதயநிதி ஸ்டாலினுக்கு சவால் விட்டு பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | ரூ. 1000 இல்லை! ரூ. 2500 ஆக உயரும் மகளிர் உரிமை தொகை! அண்ணாமலை சொன்ன முக்கிய தகவல்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ