Maha Shivratri 2025: உலகுக்கே பிடித்த சிவ பெருமானுக்கு பிடித்த ராசிகள் எவை தெரியுமா? எந்த ராசிகள் மீது அவர் சிறப்பு அருளை பொழிகிறார்? உங்கள் ராசியும் இதில் உள்ளதா?
Favourite Zodiac Signs of Lord Shiva: இந்து சமயத்தின் முக்கியமான கடவுள் சிவபெருமான். சிவபெருமானின் மிக முக்கியமான பண்டிகையான மகா சிவராத்திரி இன்னும் சில நாட்களில் கொண்டாடப்படவுள்ளது. பக்தர்களை மகிழ்விப்பதில் சிவ பெருமான் ஒரு வள்ளல். குறிப்பாக சனி பெயர்ச்சி, ஏழரை சனி காலங்களில் அவதியில் உள்ளவர்கள் சிவ பெருமானை துதித்தால், அவர்களுக்கு சிவன் உடனடியாக அருள் புரிகிறார். இந்த நிலையில், சிவ பெருமானுக்கு மிகவும் பிடித்த அதிர்ஷ்ட ராசிகள் பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
மும்மூர்த்திகளில் ஒருவரான சிவபெருமான் பக்தர்களுக்கு வாரி வழங்கும் தெய்வமாகவும் உள்ளார். கிரகங்களால் ஏற்படும் இன்னல்களை சிவ பெருமான் எளிதில் போக்குகிறார். மனமுருகி பிரார்த்திக்கும் ஈசன் பக்தர்களின் நியாயமான வேண்டுதல்களை உடனடியாக பூர்த்தி செய்து வைக்கிறார்.
சிவனுக்கு உகந்த பண்டிகைகளில் மகா சிவராத்திரி மிக முக்கியமான ஒன்றாகும். மாசி மாதம் தேய்பிறை சதுர்தசி திதியில் இந்த மக சிவராத்திரி பண்டிகை அனுசரிக்கப்படுகின்றது. இந்த ஆண்டு மகா சிவராத்திரி பிப்ரவரி 26 ஆம் தேதிகொண்டாடப்படவுள்ளது.
சிவபெருமான் பாரபட்சம் இல்லாமல் அனைத்து ராசிக்காரர்களுக்கும் தனது அருளை வழங்குகிறார். எனினும், ஜோதிட ரீதியாக சில ராசிகள் சிவனுக்கு பிடித்த ராசிகளாக கருதப்படுகின்றன. இவர்களை சிவன் தன் இமைக்குள் வைத்து தாய் போல் காக்கிறார். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
மேஷம்: மேஷ ராசிக்காரர்கள் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைய சிவ பெருமான் உடன் இருந்து உதவி செய்கிறார். சிவனருளால் இவர்கள் பல உச்சங்களை தொடுகிறார்கள். நேர்மையாகவும், உதவும் பண்புடனும் இருக்கும் இவர்களை சிவபெருமான் எப்போதும் கைவிடுவதில்லை. வணிகத்திலும் நிதி ஆதாயங்களுக்கான வாய்ப்புகள் அதிகமாக கிடைப்பதோடு, ஈசன் அருளால் இவர்கள் அலுவலக பணிகளிலும் பெரிய அளவில் வெற்றி பெறுவார்கள்.
துலாம்: துலாம் ராசிக்காரர்கள் சிவ பெருமானின் செல்லப்பிள்ளைகளாக பார்க்கப்படுகிறார்கள். சிவ பெருமான் இவர்களை எப்போதும் தனது அருள் வட்டத்தில் வைத்திருக்கிறார். கல்வி, பேச்சாற்றல், புத்திசாலித்தனம் ஆகியவற்றை அளித்து ஈசன் இவர்களை வெற்றிகரமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ வைக்கிறார். இந்த ராசிக்காரர்கள் அனைத்து துறைகளிலும் வெற்றி பெறுகிறார்கள். சிவ பக்தியால் மகிழும் ராசிக்காரர்கள் இவர்கள். ஏழரை சனி (Ezharai Sani) காலத்திலும் துலா ராசிக்காரர்கள் சிவ பெருமானை வழிபட்டால், அனைத்து பிரச்சனைகளும் பனி போல் விலகும்.
விருச்சிகம்: இந்த ராசிக்கு செவ்வாய் அதிபதி. விருச்சிக ராசிக்காரர்கள் மீது சிவ பெருமான் சிறப்பு ஆசீர்வாதங்களை பொழிகிறார். சிவன் அருளால், இவர்கள் கல்வி, பணியிடம், வர்த்தகம் என அனைத்து இடங்களிலும் சிறந்த பலன்களை பெறுகிறார்கள். சிவபெருமானின் சிறப்பு அருளால், இந்த ராசிக்காரர்கள் அனைத்து துறைகளிலும் வெற்றி பெறுவார்கள். இவர்கள் மனமுருகி சிவனை வழிபட்டால், அனைத்து பிரச்சனைகளும் பனி போல் விலகும்.
மகரம்: மகர ராசி சனியால் ஆளப்படும் ராசி. மேலும் சனி பகவான் சிவனை தனது தெய்வமாகக் கருதுகிறார். ஆகையால், இந்த ராசிக்காரர்கள் சிவ பெருமானின் சிறப்பு ஆசீர்வாதத்தை பெறுகிறார்கள். சனி அருளால் இவர்கள் வாழ்நாள் முழுவதும் செல்வச் செழிப்பில் திளைக்கிறார்கள். சிவனது அருட்பார்வை இவர்கள் மீது எப்போதும் இருக்கின்றது. இவர்களுக்கு பணத்திற்கு பஞ்சமே ஏற்படாது.
கும்பம்: கும்ப ராசியின் அதிபதி சனி பகவான். சிவ பெருமானுக்கும் பிடித்த ராசியாக இது இருப்பதால், சிவன் மற்றும் சனி என இருரின் ஆசிகளும் இந்த ராசிக்காரர்களுக்கு கிடைக்கின்றன. இவர்களுக்கு சனி பெயர்ச்சி (Sani Peyarchi), ஏழரை சனி என சனியால் ஏற்படும் பாதிப்புகளுக்கு சிவன் அருளால் உடனடி தீர்வு கிடைக்கும். இவற்றின் பாதிப்புகள் கும்ப ராசிக்காரர்களுக்கு குறைவாகவே இருக்கும்.
மகா சிவராத்திரியன்று சிவ புராணம், பில்வாஷ்டகம், வைத்தியநாதாஷ்டகம், லிங்காஷ்டகம் போன்ற சிவ ஸ்தோத்திரங்களை பாராயணம் செய்வது சிவன் அருள் கிட்ட உதவும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.