Chennai Rain Latest News: தமிழ்நாட்டில் மீண்டும் மிக கனமழை பொறுத்தவரை தீவிரமாக வாய்ப்பு இருக்கிறது. எந்தெந்த நாட்களில் தமிழகத்தில் மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது? எந்தெந்த மாவட்டங்களில் மழை வரப்போகுது? என்பதைக் குறித்து பார்ப்போம்.
தமிழகத்தில் பல மாவட்டங்களில் வெயில் பயங்கரமாக அடிக்கிறது. எனவே சில மாவட்டங்களுக்கு மட்டும் கனமழையின் தீவிரம் அதிகமாக இருக்கும், மற்ற மாவட்டங்களில் இயல்பாகவும் வறண்ட வானிலையும் வானம் மேகமுட்டமாக காணப்பட வாய்ப்புகள் இருக்கிறது.
தமிழ்நாட்டில் கனமழையின் தீவிரம் உறுதியாகி இருக்கிறது. அதிலும் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் வருகிற பிப்ரவரி 28 ஆம் தேதி முதல் படிப்படியாக கனமழை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.
பிப்ரவரி 28 ஆம் தேதி மிதமான மழையாக தொடங்கி மார்ச் 1, 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் பரவலாக கனமழையானது தமிழ்நாட்டில் தென்கடலோர மாவட்டங்கள் ராமநாதபுரம் தூத்துக்குடி திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் அதிகரிக்கும். எனவே வெளியே செல்லும் போது தேவையான பாதுகாப்புடன் செல்லுங்கள்.
தென்கடலோரம் மாவட்டத்தில் இருக்கக்கூடிய பல்வேறு பகுதிகளில் கனமழையானது மிக அதிகமாக பதிவாகும். பிப்ரவரி 28 தொடங்கி மார்ச் 1, 2, 3 மற்றும் 4 ஆம் தேதிகள் வரைக்கும் விட்டுவிட்டு பரவலாக கனமழை தொடர்ந்து பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
தென்கடலோர மாவட்டங்கள் முழுவதுமாகவே பலத்த மழை பதிவாகும். தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் தென்காசி மாவட்டத்தில் சில பகுதிகளில் பரவலாக கனமழையானது பதிவாகும்.
எனவே தமிழ்நாட்டை பொறுத்த வரை பிப்ரவரி மாதம் முடியும் போது மழை பொழிவு கொஞ்சம் கொஞ்சமா அதிகரித்து நான்கு ஐந்து, நாட்கள் தொடன்ர்து ஆங்காங்கே மழை பெய்யும். எனவே தொடர்ந்து அதிக நாட்கள் மழை பெய்ய வாய்ப்பில்லை.
இந்த மழை பெய்த பிறகு, தமிழ்நாட்டில் வெப்பநிலை பொறுத்தவரைக்கும் அதிகரிக்கும். எனவே வெப்பநிலை எதிர்கொள்ள தயாராகுங்கள். பகல் நேர வெப்பநிலையானது மார்ச் இரண்டாவது வாரத்திலிருந்து அதிகமாக இருக்கப்போகிறது. இந்த வருடம் இயல்பை விட கூடுதலான வெப்பநிலை இருக்கும்.
தென்மாவட்டத்தில் பிப்ரவரி 28 லிருந்து மார்ச் 4 வரைக்கும் பரவலாக தொடர்ந்து மழை நீடிக்கும். டெல்டா மாவட்டத்தில் நாகை, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் மட்டும் மழை பெய்யும். புதுக்கோட்டையில் சில பகுதிகளில் மழை பதிவாகும். அதாவது புதுக்கோட்டையின் கிழக்கு பகுதிகளில் பரவலாக மிதமான மழை இருக்கும். நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டையில் மட்டும் பரவலாக மிதமான மழை எதிர்பார்க்கலாம், மற்றபடி மற்ற இடங்களில் மழை தீவிரமாக வாய்ப்பு இல்லை.
மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், திருச்சியில் வானம் மேகமுட்டமாக இருக்கும். அந்த பகுதிகளில் லேசான மழையானது ஆங்காங்கே பதிவாகும். மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் வானம் மேகமூட்டமாக இருக்கும். சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை எதிர்பார்க்கலாம்.
சென்னையை பொறுத்தவரைக்கும் வறண்ட வானிலை தான் இருக்கும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அநேக இடங்களில் வறண்ட வானிலையும் வானம் மேகமுட்டமாகவே இருக்கும்.
உள் மாவட்டங்களான வேலூர், திருப்பத்தூர் ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருப்பூர், ஈரோடு மாவட்டத்தில் அநேக பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டமாகவும், வறண்ட வானிலையும் காணப்படும்.
அடுத்தபடியாக மேற்கு தொடர்ச்சி மழையை ஒட்டியுள்ள நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, தென்காசி மாவட்டங்களில் தென்காசியில் மட்டும் இம்மாதம் இறுதியில் மழை எதிர்பார்க்கலாம். ஆனால் நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் வானம் மேகமூட்டமாக இருக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ