Tamil Nadu Latest News Updates: திருச்சியில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி (TN Education Minister Anbil Mahesh Poyyamozhi) செய்தியாளர்களை சந்தித்தார். தமிழ்நாடு முதல்வர் பிரதமர் மோடிக்கு தமிழ்நாட்டின் கல்விக்கான நிதியை விடுவிக்கக் கோரி கடிதம் எழுதிய நிலையில், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று பதில் கடிதம் எழுதியிருந்தார்.
TN Latest News Updates: இடைநிற்றல் அதிகமாகும்
இந்த கடிதத்தை குறிப்பிட்டு பேசிய அன்பில் மகேஷ்,"பி.எம்.ஸ்ரீ திட்டம் மூலம் புதிய கல்விக் கொள்கையை கொண்டு வருவதை நாங்கள் அறிந்து கொண்டோம். புதிய கல்விக் கொள்கையில் மும்மொழிக் கொள்கையை கொண்டு வருவது; பள்ளி இடைநீற்றலை அதிகரிக்கும் வகையிலான திட்டங்கள் இருப்பதை நாங்கள் சுட்டிக்காட்டினோம்.
தமிழ்நாட்டில் பள்ளி இடைநிற்றலை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். இந்த ஆட்சி பொறுப்பேற்ற போது 16 சதவீதம் இருந்த பள்ளி இடைநிற்றல், தற்போது 5% ஆக குறைத்துள்ளோம். மும்மொழி கொள்கைக்கு எதிராக அரசியல் கட்சிகள் மட்டுமல்ல தமிழக மக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
TN Latest News Updates: அமைச்சரின் கடிதம் தூண்டில் போடுவது போல் உள்ளது
ஒன்றிய கல்வி அமைச்சர் எழுதிய கடிதத்தில், 'தமிழின் பெருமையை நாங்கள் முன்னெடுத்து கொண்டுள்ளோம்' என குறிப்பிட்டுள்ளார் தமிழின் பெருமைகள் எல்லாம் கூறிவிட்டு இறுதியில் பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்து போட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இருமொழிக் கொள்கையை படித்த தமிழக மாணவர்கள் பல சாதனைகளை புரிந்து தமிழ்நாட்டின் கல்வியின் தரம் சிறந்தது என்பதை நிரூபித்துள்ளார்கள்.
தேசிய கல்விக் கொள்கை வரையருக்கும்போது எந்த ஒரு ஆலோசனையும் செய்யாமல் அவர்களாகவே வரையறுத்துவிட்டு தற்பொழுது அதை நம் மீது திணிக்கிறார்கள். ஒன்றிய அமைச்சரின் கடிதம் தூண்டிலை போட்டுவிட்டு அதில் மீன் சிக்காதா என்பது போல் தான் உள்ளது" என்றார்.
TN Latest News Updates: புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பது ஏன்?
மேலும், தேசிய கல்விக் கொள்கையை ஏன் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதற்கான காரணங்களாக பாரம்பரிய மொழிக்கான அர்ப்பணிப்பு, இரு மொழிக் கொள்கையின் கல்வி வெற்றி, மொழி திணிப்புக்கு எதிர்ப்பு உள்ளிட்ட 12 காரணங்கள் அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார். தொடர்ந்து பேசிய அன்பில் மகேஷ்,"மும்மொழி கொள்கையை அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் எதிர்த்துள்ளனர்.
TN Latest News Updates: 56 மொழிகள் இந்தியால் விழுங்கப்பட்டுள்ளது
வெவ்வேறு அரசியல் கட்சிகளாக இருந்தாலும் வெவ்வேறு கொள்கைகளை பின்பற்றி கொண்டிருந்தாலும் தமிழகத்தை சேர்ந்த ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளும் இரு மொழிக் கொள்கையை ஆதரிக்கிறார்கள். இந்தியாவில் உள்ள 56 மொழிகள் இந்தி மொழியால் விழுங்கப்பட்டுள்ளது. அந்த நிலை நம் தமிழ் மொழிக்கும் வந்து விடக்கூடாது. எந்த நிலையிலும் நாங்கள் அவர்களின் திட்டத்திற்கு பலியாக மாட்டோம்.
தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் தமிழ்நாட்டு வரலாற்றை அவர்கள் மாற்றி விடுவார்கள். கல்விக்கான நிதியை விடுவிக்க வேண்டும் என முதலமைச்சர் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதம் வெறும் காகிதம் அல்ல. அது 43 லட்சம் மாணவர்களின் எதிர்காலம், அதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
TN Latest News Updates: புதிய கல்விக் கொள்கையை ஏற்கவில்லை
தமிழ் குறித்தும் தமிழ் இனத்தை பற்றியும் எங்களுக்கு நன்றாக தெரியும். அதை நீங்கள் எடுத்து கூற வேண்டியது இல்லை. மீண்டும் மீண்டும் ஒன்றிய அரசு பிளாக்மெயில் செய்வதை நிறுத்த வேண்டும். பி.எம்.ஸ்ரீ திட்டத்தை தமிழக அரசு ஒத்துக்கொள்ளவில்லை. ஆனால் ஏற்கனவே தமிழக அரசு (Tamil Nadu Government) ஒத்துக்கொண்டதாக அவர்கள் கூறுகிறார்கள் அது தவறு.
தமிழகத்தில்தான் பள்ளி இடைநிற்றல் சதவீதம் குறைவாக உள்ளதாக ஒன்றிய அரசே பாராட்டியுள்ளார்கள். இந்த விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை முதலமைச்சர் (TN CM MK Stalin) எடுப்பார். கடந்தாண்டு 36 சதவீதம் மக்களால் விரும்பப்பட்ட முதலமைச்சர் இந்த ஆண்டு 57 சதவீதம் மக்களால் விரும்பப்படும் முதலமைச்சராக வந்துள்ளார்.
TN Latest News Updates: ரூ. 5 ஆயிரம் கோடி தமிழ்நாட்டுக்கு இழப்பு
பாஜகவினரின் வேலையை முக்கிய பிரச்சினைகளை திசை திருப்புவது தான் அதற்காகத்தான் கெட் அவுட் ஸ்டாலின் என்பதை செய்து வருகிறார்கள். ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் திசை திருப்பும் வகையில் மிகப்பெரிய பிரச்சனையை அவர்கள் கொண்டு வருவார்கள்" என்றார். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் (Union Education Minister Dharmendra Pradhan) முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில், "அறிவியல் கல்வியில் கவனம் செலுத்தும் PM SHRI பள்ளிகளை செயல்படுத்தாததால் தமிழ்நாடு ரூ.5 ஆயிரம் கோடியை இழக்கிறது" என குறிப்பிட்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க | 'பிளாக்மெயில் வேண்டாம்' மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எச்சரிக்கை
மேலும் படிக்க | இன்னோர் மொழிப்போரை தூண்டுவது போல் உள்ளது - அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ