IPL 2025: வலிமையாகும் சிஎஸ்கே... பிராவோ இடத்தில் இனி இந்த மூத்த வீரர் - யார் இவர்?

IPL 2025, CSK: சென்னை சூப்பர் கிங்ஸில் இருந்து பிராவோ விலகிய நிலையில், புதிய உதவி பௌலிங் பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர் ஒருவரை நியமித்துள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Feb 24, 2025, 03:31 PM IST
  • ஐபிஎல் 2025 வரும் மார்ச் 21ஆம் தேதி தொடங்குகிறது.
  • மார்ச் 23ஆம் தேதி சிஎஸ்கே அதன் முதல் போட்டியில் மோதல்.
  • சிஎஸ்கேவின் முதல் போட்டியில் மும்பை அணி உடன் மோதல்.
IPL 2025: வலிமையாகும் சிஎஸ்கே... பிராவோ இடத்தில் இனி இந்த மூத்த வீரர் - யார் இவர்? title=

IPL 2025, CSK: சென்னை சூப்பர் கிங்ஸில் இருந்து பிராவோ விலகிய நிலையில், புதிய உதவி பௌலிங் பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர் ஒருவரை நியமித்துள்ளது. சிஎஸ்கேவின் பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்த டுவைன் பிராவோ, தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

IPL 2025, CSK: விரைவில் தொடங்கும் ஐபிஎல்

ஐபிஎல் 2025 தொடர் தொடங்குவதற்கு இன்னும் ஒரு மாதம் கூட முழுவதுமாக இல்லை எனலாம். ஒருபக்கம், ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற்று வந்தாலும், 10 ஐபிஎல் அணிகளும் தொடருக்கு தயாராகி வருகின்றன. எவ்வித போட்டிகளிலும் விளையாடாத வீரர்கள் தங்களின் அணிகளின் முகாமில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

சாம்பியன்ஸ் டிராபி தொடர் மார்ச் 9ஆம் தேதி நிறைவடைகிறது. ஐபிஎல் தொடர் மார்ச 21ஆம் தேதி தொடங்குகிறது. அந்த வகையில், ஐபிஎல் தொடரில் விளையாடும் அனைத்து சர்வதேச வீரர்கள் பாகிஸ்தான் - துபாயில் இருந்து இந்தியாவுக்கு வந்து தங்களின் பயிற்சிகளை தொடங்குவார்கள். மார்ச் இரண்டாம் வாரத்தில் இருந்தே வீரர்கள் அணியின் முகாமில் இணைந்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

IPL 2025, CSK: இந்தாண்டு சேப்பாக்கத்தில் பயிற்சி கிடையாது?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்களும் விரைவில் சென்னை வருவார்கள் என கூறப்படுகிறது. கேப்டன் ருதுராஜ், நட்சத்திர வீரர் தோனி உள்ளிட்டோர் சிஎஸ்கே பயிற்சி முகாமில் விரைவில் இணைய வாய்ப்புள்ளது. வழக்கமாக சிஎஸ்கே வீரர்கள் சேப்பாக்கத்தில்தான் பயிற்சியில் ஈடுபடுவார்கள்.

ஆனால், தற்போது சேப்பாக்கத்தில் சில சீரமைப்பு பணிகள் நடப்பதாலும், ரசிகர்களின் வருகையை தடுப்பதற்காகவும் சென்னையின் புறநகர் பகுதியான நாவலூரில் அமைந்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மைதானத்தில் சிஎஸ்கே வீரர்கள் இந்தாண்டு பயிற்சி மேற்கொள்வார்கள் என கூறப்படுகிறது.

IPL 2025, CSK: விலகிய டுவைன் பிராவோ

இதுஒருபுறம் இருக்க, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கடந்த இரண்டு சீசன்களாக (2023, 2024) பந்துவீச்சு பயிற்சியாளராக பணியாற்றிய டுவைன் பிராவோ, இந்தாண்டு சிஎஸ்கேவில் இருந்து விலகினார். தற்போது அவர் ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். 2022ஆம் ஆண்டு சீசனுக்கு பின்னர் டுவைன் பிராவோ ஐபிஎல் தொடரில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.

IPL 2025, CSK: டுவைன் பிராவோக்கு பதில் ஸ்ரீதரன் ஸ்ரீராம்

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிராவோவின் இடத்தில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீதரன் ஸ்ரீராமை நியமித்துள்ளது. ஆனால், பிராவோ பந்துவீச்சு பயிற்சியாளராக பணியாற்றினார், ஸ்ரீதரன் ஸ்ரீராம் உதவி பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீதரன் ஸ்ரீராம் ஆஸ்திரேலிய ஆடவர் சீனியர் அணிக்கு சுழற்பந்துவீச்சு ஆலோசகராகவும், வங்கதேச ஆடவர் சீனியர் அணிக்கு தொழில்நுட்ப ஆலோசகராகவும் பணியாற்றினார்.

IPL 2025, CSK: யார் இந்த ஸ்ரீதரன் ஸ்ரீராம்?

49 வயதான ஸ்ரீதரன் ஸ்ரீராம் இந்திய அணிக்காக 8 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். 2010இல் ஆர்சிபி அணிக்காகவும், 2011இல் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காகவும் தலா 1 போட்டியை விளையாடி உள்ளார். மேலும், ஆர்சிபி, டெல்லி, பஞ்சாப் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளிலும் பணியாற்றியிருக்கிறார்.

சுழற்பந்துவீச்சில் வல்லவராக அறியப்படும் ஸ்ரீதரன் ஸ்ரீராம், ரவிசந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, நூர் அகமது, ஷ்ரேயாஸ் கோபால் உள்ளிட்ட சிஎஸ்கேவின் சுழற்பந்துவீச்சாளர்களை பட்டைத்தீட்டுவார் என நம்பலாம். சிஎஸ்கே அணி அதன் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வரும் மார்ச் 23ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | ஐபிஎல் 2025ல் சென்னை அணியில் விளையாடப்போகும் 2 மும்பை வீரர்கள்! யார் தெரியுமா?

மேலும் படிக்க | சிஎஸ்கே அணிக்கு எதிராக விளையாட ஹர்திக் பாண்டியாவிற்கு தடை! காரணம் இது தான்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 
 

Trending News