LNJP மற்றும் GBP மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் அரசாங்கத்தின் செலவில் இங்குள்ள ஒரு தனியார் ஹோட்டலில் தங்க வைக்கப்படுவார்கள் என்று டெல்லி சுகாதாரத் துறையின் உத்தரவு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மார்ச் 29-ஆம் தேதி வெளியிடப்பட்ட உத்தரவில், மத்திய டெல்லியில் உள்ள பட்டு லலித் ஹோட்டலில் மருத்துவர்களுக்கு தங்குமிடம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்படுடள்ளது.
இதுதொடர்பான அறிவிப்பில்., "LNJP மற்றும் GBP ஆகியவற்றில் கோவிட் -19 கடமையில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு ஹோட்டல் லலித்தில் தங்குமிடம் வழங்கப்படும் என்றும், அதற்கான கட்டணம் டெல்லி அரசாங்கத்தால் ஏற்கப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Doctors are on the frontlines of the battle against Coronavirus. All doctors serving in Delhi government's Lok Nayak Hospital and GB Pant Hospital on COVID-19 duty will now be housed in Hotel Lalit.#DelhiFightsCorona
— CMO Delhi (@CMODelhi) March 30, 2020
பராகம்பா சாலையில் உள்ள ஹோட்டலில் 100 அறைகள் கிடைக்க புது டெல்லி மாவட்ட நீதவான் தேவையான ஏற்பாடுகளை செய்வார் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், முதலமைச்சர் அலுவலகம் திங்களன்று இதுதொடர்பான ட்விட்டை வெளியிட்டுள்ளது... இந்த பதிவில்., "கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் மருத்துவர்கள் முன்னணியில் உள்ளனர். டெல்லி அரசாங்கத்தின் லோக் நாயக் மருத்துவமனை மற்றும் GB பந்த் மருத்துவமனையில் கோவிட் -19 கடமையில் பணியாற்றும் அனைத்து மருத்துவர்களும் இப்போது ஹோட்டல் லலித்தில் தங்க வைக்கப்படுவார்கள். . #DelhiFightsCorona." என்று குறிப்பிட்டுள்ளது.
தற்போது டெல்லியில் மொத்த கொரோனா வைரஸ் வழக்குகள் எண்ணிக்கை 72-ஆக அதிகரித்துள்ளது. இதில் இரண்டு இறப்புகளும் அடக்கம்.