SIP Investment: தற்போது பலரும் பங்குச்சந்தையை நோக்கி வரும் போக்கு அதிகரித்து வருகிறது. அப்படி வருபவர்கள் பலருக்கும் SIP (Systematic Investment Plan) என்றால் முதலீடு செய்யும் நிறுவனம் என நினைத்துக்கொள்கிறார்கள். ஆனால் அது தவறான புரிதலாகும்.
SIP என்றால் என்ன?
உதாரணத்திற்கு உங்களின் பலருக்கும் EMI பற்றி தெரிந்திருக்கும். அதாவது, நீங்கள் ரூ.12, ஆயிரம் வட்டியில்லா கடன் வாங்குகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். அதனை 3 மாதத்தில் செலுத்த வேண்டும் என்றால், நீங்கள் மாதத்தவணையாக (EMI) ரூ.4 ஆயிரத்தை செலுத்துவீர்கள். அதுதான் முதலீட்டில் SIP எனலாம். அதாவது, நீங்கள் உங்கள் முதலீட்டு இலக்கை அடைய சிறு சிறு தொகையாக மாதாமாதம் செலுத்துவதுதான் SIP.
SIP பலன்கள் என்ன?
குறைந்தது 500 ரூபாயில் இருந்து அதிகபட்சமாக எவ்வளவு வேண்டுமானாலும் செலுத்தலாம். பங்குச்சந்தை அடிப்படையில் இயங்கும் மியூச்சுவல் ஃபண்டில் நீங்கள் SIP மூலம் முதலீடு செய்யலாம். இதனை மாதந்தோறும் செலுத்தலாம். காலாண்டு, அரையாண்டு காலகட்டத்திற்கும் செலுத்தலாம். ஓராண்டுக்கு ஒருமுறையும் செலுத்தலாம். உங்கள் முதலீட்டு திட்டத்தை பொறுத்து அது அமையும்.
தொடர்ச்சியாக முதலீடு செய்தால் மட்டுமே நினைத்த பலனை அடைய முடியும். நீண்ட கால நோக்கில் இவை சிறப்பான வருவாயை தரும் என்பதால் ஓய்வு பிறகோ அல்லது உங்களின் குழந்தைகளின் கல்விச் செலவுக்கோ இதனை பயன்படுத்தலாம். நீண்ட கால நோக்கில் நீங்கள் முதலீடு செய்யும்போது கூட்டு வட்டியின் பலனும் உங்களுக்கு கிடைக்கும். நீங்கள் உங்களின் SIP தொகையை அதிகரிக்க வேண்டும் என்றாலும் அதிகரிக்கலாம்.
பங்குச்சந்தை ஏற்றஇறக்கமாக இருந்தாலும் பிரச்னையில்லை
பங்குச்சந்தை குறித்த புரிதல் அவசியம். அதற்கு உரிய நிதி ஆலோசகரை சந்தித்து ஆலோசனை பெறலாம். சந்தை அபாயத்தை குறைக்க பல்வேறு ஃபண்ட்களில் உங்களின் முதலீட்டை பிரித்து பிரித்து முதலீடு செய்யலாம். ஒருவேளை பங்குச்சந்தை இறங்குமுகமாக இருந்தாலும் தொடர்ச்சியாக முதலீடு செய்வது உங்களுக்கு பலனை தரலாம்.
அதாவது, பங்குச்சந்தை ஏற்றத்தில் இருக்கும் போது நீங்கள் 500 ரூபாய்க்கு 10 யூனிட்டை பெறுகிறீர்கள் என வைத்துக் கொள்வோம். அதேநேரம் பங்குச்சந்தை 20% சரிந்த பிறகு, அதே 500 ரூபாயை போட்டால் உங்களுக்கு 12 யூனிட் கிடைக்கும். அதாவது அதே பணத்திற்கு கூடுதலாக 2 யூனிட் கிடைக்கும். இதனால், நீண்ட கால நோக்கில் சந்தை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் வருவாயில் பிரச்னை இருக்காது. ஆண்டுக்கு 12-15 சதவீதம் வரை வருவாய் வர வாய்ப்புள்ளது என்கின்றனர் நிதி ஆலோசகர்கள்.
30 ஆண்டுகளுக்கு ரூ.3 ஆயிரம் vs 10 ஆண்டுகளுக்கு ரூ.30 ஆயிரம்
நிலையான ஆண்டு வருவாய் என 12% வைத்துக்கொள்வோம். இப்படியிருக்க, பலருக்கும் ஒரு கேள்வி வருகிறது. இதில் 10 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் 30 ஆயிரம் ரூபாயை முதலீடு செய்தால் நன்மை அதிகமா அல்லது 30 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் 3 ஆயிரம் ரூபாயை முதலீடு செய்தால் நன்மை அதிகமா என கேள்வி எழுப்புகின்றனர். இதனை இங்கு விரிவாக காணலாம்.
நீங்கள் 3 ஆயிரம் ரூபாயை 30 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால், மொத்த வருவாய் ரூ.1 கோடியே 5 லட்சத்து 89 ஆயிரத்து 741 ஆக இருக்கும். மொத்த முதலீடு 10 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் ஆகும். அதன் வருவாய் மட்டும் 95 லட்சத்து 9 ஆயிரத்து 741 ரூபாயாக இருக்கும். இதுவே நீங்கள் 30 ஆயிரம் ரூபாயை 10 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் மொத்த வருவாய் 69 லட்சத்து 70 ஆயிரத்து 172 ரூபாயாக இருக்கும். அதாவது 36 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருப்பீர்கள். வருவாய் 33 லட்சத்து 70 ஆயிரத்து 172 ஆக இருக்கும். முன்னர் கூறியது போல், நீண்ட காலம் முதலீடு செய்வதால் கூட்டு வட்டி பலனால் அதிக வருவாய் கிடைக்கும்.
மேலும் படிக்க | SIP vs RD: பணத்தை பனமடங்காக்க உதவும் சிறந்த முதலீடு எதுவாக இருக்கும்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ