மிஷ்கின் இயக்கித்தில், விஷால் நடிக்கும் படம் ‘துப்பறிவாளன்’. நடிகர் விஷாலே இந்தப் படத்தை தயாரித்திருக்கிறார். மேலும் இப்படத்தில் ரகுல் ப்ரீத்சிங், பிரசன்னா, வினய், ஆண்ட்ரியா பாக்யராஜ் உட்பட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு ரோல் கொரேலி இசையமைத்திருக்கிறார். கார்த்திக் வெங்கட்ராமன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தை வருகிற ஆகஸ்ட் 11-ம் தேதி ரிலீஸ் செய்யத் படக்குழு திட்டமிட்டுள்ளது.
தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.
டீசர்:
தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் தலைமையில், சங்க நிர்வாகிகள் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் விஷால் செய்தியார்களிடம் கூறியதாவது:
டிடிஹெச்சில் திரைப்படத்தை வெளியிடுவது பற்றி எந்தவித முடிவும் எடுக்கப்படவில்லை. திரையரங்கு உரிமையாளர்களின் கோரிக்கைகள் மீது நல்ல முடிவு கிடைக்கும் என நம்புகிறோம்.
தொலைக்காட்சி மற்றும் கேபிள் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு எதிராக தென்னிந்திய தயாரிப்பாளர் சங்கம் நடவடிக்கை மேற்கொள்கிறது.
இதைக்குறித்து தயாரிப்பாளர் சங்கம் மற்றும் கில்டும் இணைந்து கூறியிருப்பதாவது:-
சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் அனைத்தும் எந்த ஒரு தொலைக்காட்சி நிறுவனத்துக்கோ, தனியார் கேபிள் உரிமையாளர்களுக்கோ எந்த உரிமையும், உரிமமும் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கமும், கில்டும் கொடுக்கவில்லை என்பதை இந்த அறிவிப்பின் மூலம் தெரிவிக்கிறோம்.
மத்திய அரசு நடவடிக்கை எடுத்தால் திரைப்படங்கள் சட்ட விரோதமாக இணையத்தில் வெளியாவதை தடுக்க முடியும் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடுவிடம் நடிகர் விஷால் கோரிக்கை மனு அளித்தார். அவருடன் நடிகர் கமல் இருந்தார்.
சென்னை வந்துள்ள மத்திய தகவல் மற்றும் தொலைதொடர்புத் துறை அமைச்சர் வெங்கைய நாயுடுவை நடிகர்கள் கமல்ஹாசன், விஷால் உள்ளிட்டவர்கள் நேரில் சந்தித்து பேசினர். வெங்கையாடு நாயுடுவிடம் சட்ட விரோதமாக படங்கள் இணையத்தில் வெளியாவதை தடுக்கக் கோரிக்கை மனுவும் அளித்தனர்.
அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய விஷால்:-
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கான புதிய நிர்வாகிகளாக விஷாலின் ‘நம்ம அணி’ பெரும்பான்மையுடன் தேர்வாகியுள்ளது. தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டவர்களில் விஷால் 478 வாக்குகள், ராதாகிருஷ்ணன் 335 வாக்குகள், கே.ஆர் 224 வாக்குகள் பெற்று இருந்தார்.
இந்நிலையில் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர். இதில் ஏப்ரல் 6-ம் தேதி வியாழக்கிழமை மாலை ஸ்ரீ ராகவேந்திரா திருமண மண்டபத்தில் பதவியேற்பு விழா நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
நீயா நானானு பார்த்துக்கலாம் என தமிழ் ராக்கர்ஸ்க்கு விஷால் சவால் விடுத்துள்ளார்.
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை போல் நண்பனின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு ‘சிம்பா’ படத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர் அரவிந்த் ஸ்ரீதர்.
இந்த படத்திற்கான இசை வெளியீட்டு விழா நடந்தது. விழாவில் இயக்குநர்கள் மிஷ்கின், காந்திகிருஷ்ணா, வெங்கட் பிரபு நடிகர்கள் விஷால், ஜெயம் ரவி, பிரசன்னா, பிரித்வி பாண்டியராஜன், அரவிந்த், அஜய், நடிகைகள் சினேகா, தன்ஷிகா கலந்து கொண்டனர்.
விஷாலின் வேட்பு மனுவுக்கு எதிராக தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் நீதிமன்றம் செல்ல இருப்பதால் அவரது மனுவை நிறுத்தி வைத்துள்ளதாக தேர்தல் அதிகாரி ராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
விஷால், தமன்னா, வடிவேலு, சூரி, மற்றும் பலர் நடித்து வரும் படம் ‘கத்தி சண்டை’. இந்த படத்தை சுராஜ் இயக்கயுள்ளர் மற்றும் ஹிப்ஹாப் தமிழா இசை அமைத்துள்ளார். நீண்ட இடைவேளிக்கு பிறகு வடிவேலு நடித்து உள்ளார். கத்தி சண்டை, நவம்பர் 18-ம் தேதி வெளியாகிறது. தற்போது இப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
கடந்த வாரம் வெளி வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் படம் ரெமோ. இந்த படத்திற்கான ப்ரெஸ் மீட் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது.
அந்த ப்ரெஸ் மீட்டில் பேசிய சிவகார்த்திகேயன் ரெமோ திரைப்படம் வெளியிடுவதற்கு பெரிதும் போராடியதாகவும் மற்றும் சிலர் படம் வெளிவர விடாமல் தொல்லைகள் கொடுத்ததாகவும் அவர் கூறி கண்ணீர் விட்டு அழுதார். இச்சம்பவம் தமிழ் திரை வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் விஷால் நடித்திருக்கும் படம் 'மருது' இதன் டிரெய்லர் வெளியாகி அமோக ஆதரவு பெற்றுள்ளது. இப்படத்தை முத்தையா இயக்கியுள்ளார். ஏற்கனவே இவர் கொம்பன் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய மற்றும் இமான் இசையமைத்திருக்கிறார்.
விஷால், ஸ்ரீதிவ்யா, ஆர்.கே.சுரேஷ், சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் இப்படம் வரும் மே 20-ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக தகவல் வந்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.