அரசியல் பழிவாங்கும் நோக்கத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேராசிரியர் ஆனந்த் டெல்டும்டே உட்பட அனைவரையும் விடுதலை செய்யக் கோரி தமிழகம் முழுவதும் செப்டம்பர் 15 ஆம் தேதி மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற உள்ளது.
கடந்த ஆண்டு முதல் உலகையே ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பினால் பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் ஆன்லைன் வகுப்புகளுக்கு மாறின. தற்போது, செப்டம்பர் மாதம் முதல் தேதியில் இருந்து தமிழகத்தின் பள்ளிகளில் 9 முதல் 12 வகுப்புகள் வரை திறக்கப்படவுள்ளதால் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
கூட்டுறவுத் துறை மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய பாக்கி தொகையாக மாநில அரசு ரூ.182 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.
நீண்ட நாட்களாக பழைய ஓய்வூதியத் திட்டத்தினை அமல்படுத்தக்கோரி ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது குறித்து இன்று ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களை சந்தித்தனர்.
பள்ளிகளில் பின்பற்றப்பட வேண்டிய கொரோனா முன்னெசரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற 2021-2022 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தொடர் இன்று காலை 10 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கி நடைபெற்று முடிந்தது. தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றபின் தாக்கல் செய்யப்பட்ட முதல் பட்ஜெட் கூட்டத் தொடர் இதுவாகும்.
அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் மூலம் திண்டுக்கல் மாவட்ட பகுதிகளில் உள்ள நிலக்கோட்டை மற்றும் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி , மேலூர், மதுரை வடக்கு, திருமங்கலம் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் இருக்கக்கூடிய சுமார் 1 இலட்சத்து 5 ஆயிரம் ஏக்கரில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
9 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சுழற்சி முறையில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகளை திறப்பதற்கான முறையான நெறிமுறைகளை அரசு உருவாக்கி வருகிறது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு விரைவில் ஒரு மிகப்பெரிய நல்ல செய்தி வரவுள்ளது. மத்திய அரசைத் தொடர்ந்து தமிழக அரசும் அகவிலைப்படி உயர்வை அறிவிக்கக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
12ம் வகுப்பு மாற்றுத்திறனாளி தனிதேர்வர்கள் துணை தேர்வுகளை எழுத விலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது, 2016 மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டப்பிரிவு 17(i)-இன் அடிப்படையில் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது...
தமிழகம் முழுவதும் இன்று திமுக அரசுக்கு எதிராக அதிமுக-வினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருவதாக அதிமுக குற்றம் சாட்டியுள்ளது.
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு தமிழக பள்ளிக்கல்வித் துறை ஒரு நல்ல செய்தியை அளித்துள்ளது. திறன் மேம்பாட்டுக்கு ஒவ்வொரு ஆசிரியருக்கும் 5 நாட்கள் பயிற்சி அளிக்க தமிழக பள்ளிக்கல்வித் துறை திட்டமிடப்பட்டுள்ளது.
முதலீட்டாளர்கள் விழாவில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், இன்று துவக்கி வைக்கப்பட்ட திட்டங்கள் மூலம், நேரடியாகவும், மறைமுகமாகவும் 83432 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கூறினார்.
தமிழகத்தில் 82,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில், 47 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், இன்று ஒப்பந்தம் செய்யப்படுகின்றன.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று டெல்லியில் குடியரசுத் தலைவரை சந்தித்தார். பல முக்கிய விஷயங்களைக் குறித்து இந்த சந்திப்பில் கலந்தாலோசிக்கப்பட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.