மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் (Kamal Haasan) , "சாராய அணைக்கட்டின் மதகுகள்? நாளை திறக்கப்படுகிறதா? இது எந்தவிதத்தில் சரி என்ற கோணத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
மாநிலத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,886 ஆக அதிகரிப்பு. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,43,945 ஆக அதிகரித்துள்ளது. தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 54,122 ஆக இருக்கிறது.
ஜார்க்கண்டில் மதுபானங்கள் ஹோம் டெலிவரி சேவையைத் தொடங்க அனுமதி பெற்றுள்ளதாக ஆன்லைன் உணவு விநியோக தளங்களான ஸ்விக்கி மற்றும் ஜொமாடோ வியாழக்கிழமை தெரிவித்துள்ளன.
சமூக ஊடகங்களில் ஆன்லைனில் மது விற்பனை குறித்த செய்தி வெளியானதை அடுத்து, டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் ஆன்லைனில் மது விற்பனை தொடங்கிவிட்டது என்ற செய்தி உண்மை இல்லை. அங்கு பகிரப்படும் லிங்க் போலியானது என்று விளக்கம் அளித்துள்ளது.
மது கடைகளில் கூடும் கூட்டத்தை தடுக்கும் புது முயற்சியில் புனே நகரில் மது விற்பனைக்கு ஆன்லைன் டோக்கன் முறையைத் தொடங்க மகாராஷ்டிரா கலால் துறை முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் மே 7 ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட்ட TASMAC கடைகளை உடனடியாக மூட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை தேமுதிக தலைவர் விஜயகாந்த் வரவேற்றுள்ளார்.
தமிழக அரசு மீது தனது நியாயமான கோபத்தை காட்டியதோடு, அம்மாவின் அரசு எனக்கூறி கொள்ளும் தற்போதைய அதிமுக அரசின் திட்டம் இனப்படுகொலைக்கு ஒப்பானது என தமிழக அரசை கடுமையாக சாடினார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.