கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.1347 கோடி நிலுவைத் தொகையை தர முடியாது என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், அதுக்குறித்து ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
'ஹரஹர மஹாதேவகி' படத்தை இயக்கிய சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடித்துள்ள படம் 'இருட்டு அறையில் முரட்டு குத்து'. சமீபத்தில் வெளிவந்த இந்தப் படம் கடும் எதிர்ப்புகளையும், விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது.
ஆபாச திரைப்படங்கள் ஏற்படுத்தி வரும் பண்பாட்டு சீரழிவுகள் குறித்த தகவல்கள் பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கின்றன என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
நிர்மலா டீச்சர் விவகாரத்தில் ஆதாரங்களை அழிக்க சதி நடக்கிறது. அதற்கு தமிழக ஆளுனர் துணை போகக் கூடாது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேட்டுக்கொண்டு உள்ளார்.
மாணவிகளுக்கு பாலியல் வலை வீசிய கேவலத்தின் பின்னணியில் உள்ளவர்கள் அனைவரையும் அம்பலப்படுத்தி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்;. இதனால் நிர்மலா டீச்சர் விவகார வழக்கை சி.பி.ஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் பா.ம.க வலியுறுத்தி உள்ளது.
காவிரி விவகாரத்தில் விழிப்புடன் செயல்பட்டு மத்திய அரசின் அடித்தளத்தை அசைத்துப் பார்க்கும் வகையில் மிகப்பெரிய அழுத்தம் கொடுக்கும் அரசியல் நடவடிக்கைகளை தமிழகம் மேற்கொள்ள வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக கர்நாடகத்தைச் சேர்ந்த சூரப்பா நியமிக்கப் பட்டதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், அவரை நீக்க வேண்டும் என பாமக சார்பில் வரும் 9-ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சின் நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி ஏப்ரல்11-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் கடையடைப்பு மற்றும் பொது வேலைநிறுத்தம் போராட்டம் பாமக சார்பில் நடைபெற உள்ளதால், அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
காவிரி பிரச்சினையில் தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தால், அது காலத்தைக் கடத்தும் பயனற்ற உத்தி என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் குறிப்பிட்ட காலத்திற்குள் நடத்தப்படாததால் மத்திய அரசிடமிருந்து கிடைக்க வேண்டிய நிதியில் ரூ.1950 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
சிலைகளை சேதப்படுத்த வேண்டும் என்று நினைப்பவர்களும், துடிப்பவர்களும் பகுத்தறிவற்ற முட்டாள்களாகவும், அயோக்கியர்களாகவும், காட்டுமிராண்டிகளாகவும் தான் இருக்க வேண்டும் என ராமதாஸ் கூறியுள்ளார்.
காவிரி பாசன மாவட்டங்களில், விவசாயிகள் பயன்பெறும் வகையில், கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.