பொருளாதார மந்தநிலை காரணமாக வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களை "கவர்ச்சிகரமான இலக்குகளாக" எடுத்துக் கொள்ள முயற்சிக்கக்கூடும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அரசாங்கத்தை எச்சரித்துள்ளார்.
கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா அனைத்து நாடுகளுக்கும் உதவ வேண்டும், ஆனால் உயிர் காக்கும் மருந்துகள் முதலில் இந்தியர்களுக்கு கிடைக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
நகரங்களையும் விட்டு வெளியேறும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் கிராமங்களுக்குத் திரும்பிச் செல்வதை பற்றி மத்திய மற்றும் மாநில அரசுகள் என்ன திட்டம் வைத்துள்ளன? முன்னாள் நிதியமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.
"அரசாங்கத்தின் நிதி உதவி தொகுப்பு சரியான திசையின் முதல் படியாகும் என காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்தை பாராட்டியுள்ளார்.
கொரோனா வைரஸ் மற்றும் பொருளாதார மந்தநிலைக்கு தன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசை எச்சரித்துள்ளார்!
"மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் அரசாங்கத்தை கலைப்பதில் மும்முரமாக செயல்பட்டு வரும் மத்திய அரசாங்கம் சர்வதேச கச்சா எண்ணெய் 35% வீழ்ச்சி அடைந்துள்ளது என்பதை கவனிக்க தவறிவிட்டது.
ஒரு பாரிய வளர்ச்சியில், முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஜோதிராதித்யா சிந்தியா செவ்வாயன்று காங்கிரசில் இருந்து விலகினார். இந்நிலையில் அவரது ராஜினாமா 5-6 இளம் தலைவர்களை ராஜினாமா செய்ய தூண்டுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனியார் துறை கடன் வழங்குநரான YES வங்கியின் வாரியத்தை ரிசர்வ் வங்கி கையகப்படுத்திய ஒரு நாள் கழித்து, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை (மார்ச் 6) குறித்த வங்கியின் வைப்புத்தொகையாளர்களுக்கு அவர்களின் பணம் பாதுகாப்பானதாக இருக்கும் என்று உறுதியளித்துள்ளார்.
இந்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகளின் கீழ் YES வங்கி கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், அதன் பங்குகள் கடுமையாக சரிந்துள்ளன. இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, நரேந்திர மோடி அரசாங்கம் நாட்டின் பொருளாதாரத்தை அழித்ததாக அவதூறு பேசியுள்ளார்.
தனது சமூக ஊடக கணக்குகளை கைவிடுவது குறித்து யோசிப்பதாக பிரதமர் மோடி நேற்று அறிவித்திருந்த நிலையில், தற்போது ஏன் இந்த அறிவிப்பை வெளியிட்டார் என்பதற்கான விடையினை மக்களுக்கு மற்றொரு ட்விட்டர் பதிவின் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.
இன்று மாலை தனது சமூக ஊடக கணக்குகளை கைவிடுவது குறித்து யோசிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்த நிலையில், "சமூக ஊடக கணக்குகளை அல்ல, வெறுப்பைக் கைவிடுங்கள்" என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.