21_வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் ஐதராபாத்தில் நேற்று நடைபெற்றது. மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தலைமையில் மாநிலத்தை சேர்ந்த நிதியமைச்சர் மற்றும் மத்திய, மாநில உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் ஜிஎஸ்டி வரி குறித்து விவாதிக்கப்பட்டன. பிறகு அத்தியாவசிய பொருட்களுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரியை குறைக்க ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு செய்தது.
இதனால் தினமும் மக்களால் பயன்படுத்தப்படும் 40 பொருட்களுக்கான ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளது. மேலும் சில பொருட்களுக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
முழுமையான விவரங்கள்:-
நாடு முழுவதும் ஜிஎஸ்டி எனும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பை கடந்த ஜூலை 1-ம் தேதி அமல்படுத்தப்பட்டது. ஜிஎஸ்டி அமல்படுத்திய பிறகு நாடு முழுவதும் 87 லட்சம் ஜிஎஸ்டி இணையத்தில் பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று ஜிஎஸ்டி தொடர்பாக டெல்லியில் அருண் ஜெட்லி கூறியது:-
ஜிஎஸ்டி வரியால் 91,000 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 92,000 கோடி ரூபாய் அதிகமாக வருவாய் கிடைத்துள்ளது.
நாளை சுதந்திர தின விழாவையொட்டி நாட்டு மக்களுக்கு புதிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:
நாட்டின் விடுதலைக்காக உயிர் தியாகம் செய்தவர்களுக்கு நாம் கடன்பட்டுள்ளோம். சுதந்திர தின நாளில் அவர்களை நாம் போற்றுவோம். நம் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்தவர்கள் தான் நாம் முன்னேறுவதற்கு முன்னோடிகளாக இருக்கிறார்கள்.
அரசாங்கம் சட்டங்களை உருவாக்கவும், செயல்படுத்தவும், வலுப்படுத்தவும் முடியும். ஆனால் அனைவருக்கும் சட்டத்தின் முன் கடமைப்பட்டிருப்பது தான் கடமை.
கடந்த 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஒரே நாடு, ஒரே வரி வசூலிக்கும் வகையில் ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு அமல்படுத்தியது.
இந்நிலையில், ஜிஎஸ்டி வரி தொடர்பான விளக்கக்கூட்டம் சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு அரங்கில் நேற்று நடந்தது. இதில், பல்வேறு தொழில் வர்த்தக சங்கங்களின் நிர்வாகிகள், தொழில் அதிபர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசியது:-
ஜிஎஸ்டி குறித்து நல்ல செய்தி வந்த வண்ணம் உள்ளது. இந்த வரி குறித்து மக்களின் கருத்துகள் கேட்கப்பட்டது. ஜிஎஸ்டி பலன்கள் தெளிவாக உள்ளன. நாட்டின் பொருளாதாரத்தை மாற்றியுள்ளது.
இன்று முதல் தியேட்டர்கள் வழக்கம்போல் செயல்படும் என திரையரங்கு உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
தியேட்டர்களுக்கு விதிக்கப்படும் கேளிக்கை வரி குறித்து, திரையரங்கு உரிமையாளர்கள் தமிழக அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் அரசின் முடிவை ஏற்றுக் கொண்டனர் திரையரங்கு உரிமையாளர்கள். இதனையடுத்து, இன்று காலை முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளும் வழக்கம்போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு விதித்துள்ள 30 சதவீத கேளிக்கை வரியை ரத்து செய்ய வலியுறுத்தி, திரையரங்கு உரிமையாளர்கள் கடந்த 3-ம் தேதி முதல் திரையங்குகளை மூடி போராட்டம் நடத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜூன் 1-ம் தேதி முதல் ஒரே நாடு! ஒரே வரி! விதிப்பு முறையான ஜிஎஸ்டி வரி நடைமுறை அமலுக்கு வந்தது.
இதையடுத்து ஒரே வரி விதிப்புக்கான நடைமுறைகளை மாநில அரசுகள் செயல்படுத்தத் தொடங்கியுள்ளன.
அதன் ஒரு பகுதியாக மாநில எல்லைகளில் உள்ள வணிக வரி சோதனை சாவடிகள் அகற்றப்பட்டு வருகின்றன. ஜிஎஸ்டி வரி விதிப்பு அறிமுகமான முதலே தமிழ்நாடு - கேரளா, தமிழ்நாடு - ஆந்திரா எல்லையில் உள்ள சோதனை சாவடிகள் அகற்றப்பட்டன.
இதைத் தொடர்ந்து மற்ற மாநிலங்களிலும் சோதனை சாவடிகள் அகற்றப்பட்டு வருகின்றன. இதுவரை நூற்றுக்கணக்கான சோதனை சாவடிகள் தங்களது தினசரி பணியை நிறுத்தி விட்டன.
கேளிக்கை வரிக்கு எதிர்த்து திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் 1000 திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில், அபிராமி ராமநாதன் தலைமையிலான திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் இன்று நிதி அமைச்சர் ஜெயக்குமாரை சந்தித்தனர்.
இதற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார்:-
’திரையரங்கங்களுக்கான கேளிக்கை வரியை குறைப்பது தொடர்பாக முதல்வர் பழனிசாமியுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும்.
ஜிஎஸ்டி தொடர்பான தவறான புரிதல்களுக்கு மத்திய வருவாய் துறை செயலாளர் ஹஷ்முக் ஆதியா டிவிட்டரில் தெளிவுபடுத்தியுள்ளார்.
ஜிஎஸ்டி தொடர்பாக மக்களிடையே உள்ள தவறான புரிதல்கள் மற்றும் அவற்றுக்கான விளக்கங்களை ஹஷ்முக் ஆதியா அளித்துள்ளார்.
MYTHS & REALITIES on #GST
by Revenue Sec Shri @adhia03
Find Here pic.twitter.com/7WFPRvWZW3
பாராளுமன்ற மைய மண்டபத்தில் நள்ளிரவில் அறிமுக விழா சரக்கு, சேவை வரி அமலுக்கு வந்ததுநாட்டில் முதன் முதலாக, நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிக்க வகை செய்யும் ஜிஎஸ்டி இன்று நள்ளிரவு முதல் அமலானது.
பாராளுமன்றத்தில் நடந்த விழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியும் பிரதமர் நரேந்திர மோடியும் சேர்ந்து இதனை தொடங்கி வைத்தனர்.
நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி வரியை நாளை(ஜூலை 1-ம் தேதி) முதல் அமல்படுத்தப்படுகிறது.
ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை அறிமுகப்படுத்துவதற்காக இன்று நள்ளிரவு பாராளுமன்றத்தில் சிறப்பு கூட்டம் நடைபெறுகிறது. இந்த விழாவுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி முன்னிலை வகிக்கிறார். பிரதமர் மோடி ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையை தொடங்கி வைத்து பேசுகிறார். அதன் பிறகு நிதியமைச்சர் அருண் ஜெட்லி ஜிஎஸ்டி வரி குறித்து விளக்கம் அளிக்க உள்ளார்.
ஜூலை 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஜி.எஸ்.டி மசோதா அமல்படுத்தப்பட உள்ள நிலையில், அதற்கான துவக்க விழா ஜூன் 30-ம் தேதி நள்ளிரவு நாடாளுமன்றத்தில் நடைபெறும் என மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பு(சரக்கு மற்றும் சேவை வரி) அமுல் படுத்த மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக கடந்த ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதி சரக்கு மற்றும் சேவை வரி(ஜி.எஸ்.டி.) விதிப்பு அரசியல் சாசன திருத்த மசோதாவை பாராளுமன்றத்தில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்தார்.
டெல்லியில் நேற்று நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 66 பொருள்களுக்கான சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) குறைக்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி கவுன்சிலின் 16-வது கூட்டம் டெல்லியில் நேற்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர்:-
66 பொருள்களுக்கு மொத்தம் 133 பொருள்களுக்கான ஜிஎஸ்டி-யைக் குறைக்க வேண்டுமென்று பரிந்துரை வந்திருந்தது. இதில், 66 பொருள்கள் மீதான வரி குறைக்கப்பட்டுள்ளது. லாட்டரி உள்ளிட்டவை மீதான வரி குறித்து வரும் 18-ம் தேதி நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றார்.
பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் பாதிப்பில்லாத வகையில் சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டு உள்ளார்.
அதைக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
ரிசர்வ் வங்கியின் 2-வது மாதாந்திர நாணய கொள்கை கூட்டம் இன்றும் நடைபெற்றது. வட்டி விகிதத்தில் மாற்றம் கொண்டுவரப்படுமா? என்று எதிர்பார்க்கப் பட்டது. இந்நிலையில், ரிசர்வ் வங்கி தலைவர் உர்ஜித் பட்டேல் வங்கிகளுக்கான வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என அறிவித்துள்ளார்.
நாணய கொள்கை கூட்டத்தில் முக்கிய அம்சங்கள்:-
* ரொக்க கையிருப்பு விகிதம் 4 சதவீதத்தில் நீடிக்கிறது.
* ரெப்போ ரேட் 6.25 சதவீதத்திலும், ரிவர்ஸ் ரெப்போ ரேட் 6 சதவீதத்திலும் நீடிக்கிறது.
* எஸ்.எல்.ஆர். விகிதம் 0.5% குறைக்கப்பட்டு 20 சதவீதமாக இருக்கும்.
ஜிஎஸ்டி வரிவிதிப்பை கண்டித்து தனியார் குடிநீர் உற்பத்தியாளர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் இறங்கியுள்ளனர்.
இந்த வேலை நிறுத்தத்தால் சென்னை, புறநகர் பகுதிகளில் மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டம் குடிநீர் கேன் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் குடிநீர் கேன்களுக்கான 18% ஜிஎஸ்டி-யை திரும்ப பெற கோரி தனியார் குடிநீர் உற்பத்தியாளர்கள் இன்று மாலை முதல் கால வரம்பற்ற வேலை நிறுத்தத்தில் இறங்கியுள்ளன
புதுடெல்லி ராஷ்டிரபதி பவனில் நிதி ஆயோக்கின் 3வது ஆட்சிமன்ற குழு கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று கூடியது.
இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி:- அனைத்து மாநிலங்கள் மற்றும் முதல் அமைச்சர்களின் கூட்டு முயற்சிகளாலேயே புதிய இந்தியாவிற்கான தொலைநோக்கு பார்வை புலப்படும்.
ஜிஎஸ்டி-க்கான கருத்தொற்றுமை கூட்டாட்சிக்கான பெரிய கல்வெட்டாக வரலாற்றில் இடம்பெறும்.
ஒரே தேசம், ஒரே நோக்கம், ஒரே தீர்மானம் என்ற உணர்வை ஜி.எஸ்.டி. பிரதிபலிக்கிறது. அதுபற்றிய விவாதம் மற்றும் ஆலோசனை ஆகியவற்றை அடுத்தடுத்த தேர்தல்களில் முன்னெடுத்து செல்ல வேண்டும் என கூறினார்.
ஜிஎஸ்டி தொடர்பான நான்கு துணை மசோதாக்களுக்கு இன்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் வழங்கினார்.
நாடு முழுவதும் ஒரே சீரான வரியை அமல்படுத்தும் நோக்கில் வரும் ஜூலை 1-ம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி விதிப்பை அமல்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதன் மூலம் நாடு புதிய மாற்றத்துக்கு வித்திட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
GST बिल पास होने पर सभी देशवासियों को बधाई | नया साल, नया कानून, नया भारत!
— Narendra Modi (@narendramodi) March 29, 2017
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.