Kanimozhi on K Annamalai: திமுகவின் முக்கிய நிர்வாகிகள் மீது ஊழல் பட்டியலை வெளியிடப்போவதாக கூறி, கனிமொழி உள்ளிட்டவர்களின் சொத்து மதிப்பை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். அதற்கு கனிமொழி காட்டமாக ரியாக்ஷன் கொடுத்துள்ளார்.
அண்ணாமலை திமுக அமைச்சர்களின் சொத்துப் பட்டியலை வெளியிட்டிருந்த நிலையில், மடியில் கனமில்லை, அதனால் வழியில் பயமில்லை என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
Annamalai Rafael Watch Bill Controversy: தனது ரஃபேல் வாட்ச்சின் பில்-ஐ அண்ணாமலை இன்று வெளியிட்ட நிலையில், அண்ணாமலை கூறிய கருத்துகளுக்கும், அவர் வெளியிட்ட பில்லிலும் முரண்பாடுகள் உள்ளதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தற்போது அதுகுறித்த புதிய ஆதாரமும் வெளியாகியுள்ளது.
DMK RS Bharathi Attack On BJP Annamalai: அண்ணாமலையை பார்த்தால் சிரிப்புதான் வருது! அவருக்கு உண்மையை சொல்லும் பழக்கம் இல்லை. அவர் எப்படி ஐ.பி.எஸ் அதிகாரியாக இருந்தார் என திமுக ஆர்.எஸ்.பாரதி கடும் விமர்சனம் செய்துள்ளார்.
சென்னை கமலாலயத்தில் திமுகவில் இருக்கும் முக்கிய நிர்வாகிகளின் சொத்துப் பட்டியலை வெளியிட்ட அண்ணாமலை, என்னை மாத்துனும்னா மோடிக்கிட்ட டெல்லி போய் நேரா கம்ப்ளைண்ட் கொடுங்க என ஆவேசமாக கூறினார்.
திமுக நிர்வாகிகளின் சொத்து பட்டியலை வெளியிட்ட அண்ணாமலை, தமிழகத்தில் ஆட்சியில் இருந்த அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள் சொத்து பட்டியலும் அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.
தான் கட்டியிருக்கும் கை கடிகாரமான ரஃபேல் வாட்ச் பில்லை வெளியிட்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கோவை நண்பர் சேரலாதனிடம் இருந்து வாங்கியதாக தெரிவித்துள்ளார்.
திமுக முக்கியப் புள்ளிகளின் ஊழல் பட்டியலை வெளியிடப்போவதாக தெரிவித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இப்போது சொத்து பட்டியலை வெளியிடப்போவதாக கூறப்படுகிறது. இது ஏற்கனவே தேர்தல் ஆணையத்தில் சம்பந்தப்பட்டவர்களால் கொடுக்கப்பட்ட தகவல் என்பதால் இதில் புதிதாக என்ன இருக்கப்போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.
டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி எடுக்கும் திட்டம் ரத்து என்ற அறிவிப்பு முதல் கட்ட வெற்றியாகும், உரிய நேரத்தில் எடுத்த நடவடிக்கைகள் தான் காரணம் - கி.வீரமணி!
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி அமைக்கப்படும் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நடிகை காயத்ரி ரகுராம் மீது சைபர் க்ரைம் போலீஸாரிடம் பாஜக தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.
AIADMK BJP Alliance: வரும் 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில், பாஜக தலைமையில்தான் தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தலை சந்திக்கும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
“மத்தியில் இருப்பவர்கள்தான் கூட்டணியை முடிவு செய்வார்கள் என்றும் மாநிலத்தில் இருப்பவர்கள் அல்ல என்றும் பாஜகவுடனான கூட்டணி குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்துள்ளார்.
தொப்பி அணிந்ததால் எடப்பாடி எம்.ஜி.ஆர் ஆகி விடுவாரா என மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன் ஜீ தமிழ் நியூஸ் ஊடகத்திற்கு அளித்த நேர்காணலில் தெரிவித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.