வரலட்சுமி சரத்குமார் தனது கேரவன் டிரைவரை திட்டித் தீர்த்துள்ளார். அவர் திட்டித் தீர்த்தைப் பற்றி தனது டிவிட்டர் பகத்தில் வெளியிட்டு உள்ளார்.
இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, ஆன்லைனில் விஐபி 2 படம் பார்த்த என் கேரவன் டிரைவரை பிடித்து திட்டினேன். படங்கள் மூலம் பிழைப்பு நடத்துவபவர்களே இப்படி என்றால் மற்றவர்களை சொல்லவா வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
வரும் 23-ம் தேதி நடிகை பிரியாமணிக்கும் தொழிலதிபர் முஸ்தபா ராஜுக்கும் பெங்களூரில் திருமணம் நடைபெறுகிறது. 'கண்களால் கைது செய்' என்ற படத்தின் மூலம் இயக்குநர் பாரதிராஜாவால் தமிழ் திரையுலகுக்கு கதாநாயகியாக அறிமுகம் செய்யப்பட்டவர் பிரியாமணி.
டைரக்டர் அமீர் இயக்கிய ‘பருத்தி வீரன்' படத்தில் நடித்ததற்காக இவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. இவர் சில நடன நிகழ்ச்சிகளுக்கு நடுவராக செயல்பட்டு வந்தார்.
பிரியாமணிக்கும், தொழிலதிபர் முஸ்தபா ராஜுக்கும் இடையே நீண்டகாலமாக காதல் இருந்து வந்தது. 3 மாதங்களுக்கு முன்பு இவர்களுக்கு பெங்களூருவில் நிச்சயதார்த்தம் நடந்தது.
கடந்த ஒரு மாதமாக நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி டிவி ரசிகர்களை ஈர்த்துள்ளது.
அப்போது அந்த நிகழ்ச்சியில் காயத்ரி ரகுராம் ஒருமுறை நடிகர் பரணியை பார்த்து 'சேரி பிகேவியர்' என கூறியது பெரிய சர்ச்சையாக வெடித்தது.
இந்த சமூகத்தை இழிவுபடுத்தும்படி பேசிய காயத்ரி, தொகுத்து வழங்கிய கமல், அந்த வார்த்தையை எடிட் செய்யாமல் ஒளிபரப்பிய விஜய் டிவி ஆகியோர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும், அல்லது 100 கோடி ருபாய் நஷ்டஈடு தரவேண்டும் என புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
நடிகை வரலட்சுமி சரத்குமார் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இன்று சந்தித்தார். அப்போது பெண்கள் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
அது பற்றிய விவரங்களை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேட்டு அறிந்தார். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.
வேலு பிரபாகரன், நடிகை ஷெர்லின் தாஸை இன்று பத்திரிகையாளர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டார்.
முப்பது படங்களுக்கும் மேல் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார். இவர் இயக்கிய, 'ஒரு இயக்குனரின் காதல் டைரி' திரைப்படம் நேற்று வெளியானது.
இந்நிலையில் வேலு பிரபாகரன், நடிகை ஷெர்லின் தாஸை இன்று காலை 10.25 மணியளவில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில், சென்னையில் உள்ள லீ மேஜிக் லேண்டர்ன் திரையரங்கில் திருமணம்செய்துகொண்டார்.
வேலு பிரபாகரன் இயக்கிய 'காதல் கதை' திரைப்படத்தில், ஷெர்லின் தாஸ் நாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அக்டோபர் 18 1978-ம் தேதி ஜோதிகா பிறந்தார். இவர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். ஜோதிகா 1999-ல் வாலி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். குஷி, காக்கா காக்க, மன்மதன், சந்திரமுகி, மொழி படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகை நக்மா இவரது சகோதரி ஆவார். நடிகர் சூர்யாவை காதலித்து செப்டம்பர் 11 2006-ம் அன்று திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தியா, தேவ் என்று இரண்டு குழந்தைகள். இவக்குனர் பிரியதர்ஷனால் இந்திய படத்தில் அறிமுகமானார். இவர் மூன்று முறை தமிழக அரசு விருது பெற்றார்.
இந்த ஆண்டிற்கான சைமா விருதுகள் விழா சிங்கப்பூரில் இன்று கோலாகலமாக நடைபெறுகிறது. இதில் தென்னிந்திய மொழிப்படங்களுக்கான சிறந்த நடிக, நடிகையர் தொடங்கி மொத்தம் 16 பிரிவுகளில் சிறந்த கலைஞர்களுக்கான விருதுகள் வழங்கப்படவுள்ளன. விருதுகளுக்கு மத்தியில் நடன நிகழ்ச்சிகளும் இடம்பெறுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.