சென்னை: சென்னை உயர்நீதின்றத்தில் இருந்து விடை பெற்று மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு சென்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகளுக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில் நேரில் சொல்லாமல் விடைபெற்றதற்கு "மன்னியுங்கள்" என குறிப்பிட்டுள்ளார். இன்று தனது பிரிவு உபச்சார விழாவை தவிர்த்துவிட்டு தலைமை நீதிபதி கொல்கத்தா புறப்பட்டு சென்றதை அடுத்து, எனது நடவடிக்கைகள் புண்படுத்தி இருந்தால் அது தனிப்பட்ட முறையிலானது அல்ல, ஐகோர்ட் நலனுக்கானது மட்டுமே என அவர் எழுதி கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
அவர் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது,
அழகான மாநிலமான தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒவ்வொருவருக்கும் கடன்பட்டுள்ளேன். எனது சொந்த மாநிலம் என 11 மாதங்களாக சொல்லிக் கொண்டிருந்த மகிழ்ச்சியிலேயே உங்களிடமிருந்து விடைபெறுகிறேன். தனிப்பட்ட முறையில் உங்களிடம் விடைபெறாமல் செல்வதற்காக மன்னியுங்கள். என் மீதான உங்களின் அளவுகடந்த அன்பினால் பூரித்து போயிருக்கிறேன். என் முடிவுகள் அனைத்து நீதிமன்றம் நலனுக்கானதே தவிர, தனிப்பட்ட காரணமல்ல.
இறுதி நிமிடம் வரை உங்களுடன் இல்லாத சூழலுக்கும், உங்கள் ஒவ்வொருவரையும் தனியாக சந்தித்து சொல்லாமல் விடைபெற்றதற்கும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். பணியின் போது சிலரை புண்படும் நோக்கில் நடந்திருந்தாலும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். எனது செயல்பாடுகள் தனிப்பட்ட முறையில் இல்லாமல் நிர்வாகத்துக்குத் தேவையான நடவடிக்கையாக அது அமைந்தது எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தனது கடிதத்தில் ஆதிக்க கலாசாரத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறீர்கள். முழுமையாக தகர்த்தெறிய என்னால் இயலவில்லை. என் மீதான உங்களின் அளவு கடந்த அன்பினால் பூரித்துப் போயிருக்கிறேன். திறமையான நிர்வாகத்தை மேற்கொள்ள உதவியாக இருந்த பதிவு துறைக்கும் நன்றி என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அழகான, மதிப்புமிக்க மாநில மக்களுக்கு நானும், ரானேவும் என்றுமே நன்றி உரைத்தவர்களாக இருப்போம். நீங்கள் எங்களுக்கு அளித்த அன்பு மற்றும் விருந்தோம்பலை மறக்க முடியாது. கடந்த 11 மாதங்களாக இதை எங்கள் மாநிலம் என்று சொல்லும் பெருமையைப் பெற்றிருக்கிறோம்" என்றும் தெரிவித்துள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR