பட்ஜெட் 2025: மகளிருக்கான மாஸ் திட்டம்! 5 லட்சம் வரை குறைந்த வட்டி கடன்-தகுதி என்ன?

Budget 2025 Loan Scheme For Women : மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று நாடாளுமன்றத்தில் நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த நிலையில், இதில் பெண்களின் முன்னேற்றத்திற்காக சில திட்டங்கள் அறிவித்திருக்கிறார். இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.

Written by - Yuvashree | Last Updated : Feb 1, 2025, 01:20 PM IST
  • பட்ஜெட் 2025: பெண்களுக்கான திட்டம்!
  • தொழில் முனைவோர்களுக்கு கடன்..
  • என்ன தெரியுமா?
பட்ஜெட் 2025: மகளிருக்கான மாஸ் திட்டம்! 5 லட்சம் வரை குறைந்த வட்டி கடன்-தகுதி என்ன? title=

Budget 2025 Loan Scheme For Women : 2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வாசித்தார். அதில், தொழில் முனைவோர்கள், மருத்துவம், கல்வியில் AI தொழில்நுட்பம் என பல்வேறு விஷயங்களுக்கு சிறப்பான திட்டங்கள் வழங்கப்பட்டிருந்தன. இதில், பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கான திட்டங்கள்:

தனது பட்ஜெட் உரையில், மகளிருக்கான பட்ஜெட் குறித்து பேசிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், நாட்டின் வளர்ச்சிக்கு பெண்களும் பெரும்பங்கு ஆற்றியிருப்பதாக குறிப்பிட்டார்.

பட்டியலின பெண் தொழில்முனைவோர்களுக்கான திட்டம்!

பட்டியலினத்தில் முதல் தலைமுறை பெண் தொழில் முனைவோர்களுக்கு கடன் வழங்கும் திட்டம் குறித்து, நிர்மலா சீதாராமன் பேசினார். அரசால் தொடங்கப்படும் இந்த திட்டத்தில், 5 லட்சம் பேர் வரை பயன் பெறலாம் எனக்கூறிய அவர், அடுத்த 5 வருடத்தில் 2 கோடி வரை கடன் வழங்க முடியும் என்றும் கூறினார்.

ஏற்கனவே இருக்கும் திட்டங்கள்:

முத்ரா யோஜனா: சிறு-குறு தொழில் முனைவோர்களுக்காக கொண்டு வரப்பட்ட திட்டம் முத்ரா யோஜனா. இது பெண்களின் முன்னேற்றத்திற்கென தொடங்கப்பட்ட திட்டமாகும். இதன் மூலம், ரூ.10 லட்சம் வரை குறைவான வட்டிக்கு, பெண் தொழில்முனைவோர்கள் தங்கள் சொத்தை அடகு வைக்காமல் (No collateral) கடன் வாங்கலாம்.

ஸ்டாண்ட்-அப் இந்தியா திட்டம்:

சிந்த திட்டத்தின்படி, பசுமைத் துறை வணிகத்தை வைத்திருக்கும் பட்டியலின பெண்களுக்கு வங்கிக்கடன் வழங்கப்படும். ஒரு வங்கிக் கிளைக்கு ஒரு பெண்ணுக்கும் ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை வங்கிக் கடன்களை வழங்குகிறது. கடன் வாங்கும் பெண், தனது தொழில் 51% உரிமையை வைத்திருக்க வேண்டும்.

பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்:

புதிய சிறு-குறு வணிக நிறுவனங்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்டம் இது. பெண்கள் சுய தொழில் தொடங்குவதற்கு உந்துதலாக அமையும் திட்டமாக இது பார்க்கப்படுகிறது.

உதயம் சக்தி போர்டல்:

MSME அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட திட்டம் இது., வணிக திட்டமிடல் உதவி, காப்பீட்டு வசதிகள், பயிற்சி திட்டங்கள், தொழில் தொடங்குவதற்கான வழிகாட்டுதல் மற்றும் சந்தை ஆராய்ச்சி ஆகியவற்றை வழங்குவதன் மூலம், தொழில் முனைவோர்களுக்கு உதவுகின்றனர். ரூ.25 லட்சம் அல்லது அதற்கு மேல் செலவாகும் திட்டங்கள் இதற்கு தகுதியானவையாகும்.

மேலும் படிக்க | Budget 2025: வருமான வரி விதிப்பில் முக்கிய மாற்றங்கள்.... நடுத்தர வர்க்கத்தினருக்கு குட்நியூஸ்?

மேலும் படிக்க | Budget 2025: நடுத்தர வர்க்கத்தினருக்கு ஜாக்பாட்... ரூ.12 லட்சம் வரை வருமான வரி இல்லை..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News