தளபதி விஜய் தனது கட்சியின் கொடியை அறிமுகம் செய்து தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் பயணத்தை மும்முரமாக தொடங்கியுள்ளார். சினிமாவின் தளபதியாக விஜய்யும், அரசியலின் தளபதியாக மு.க.ஸ்டாலினும் இருந்த நிலையில், அரசியலில் விஜய் வந்ததால், இனி தளபதி யார் என்று நெட்டிசன்கள் சர்ச்சையை கிளப்பியுள்ளனர். இதுகுறித்த சுவாரஸ்ய தொகுப்பை காணலாம்.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே 25 ஆண்டுகள் தனி நபரின் கட்டுப்பாட்டில் இருந்த அரசுக்குச் சொந்தமான இடத்தை கிராம மக்கள் ஒன்றுகூடி சூறையாடிய வீடியோ வைரலாகியுள்ளது.
நாளை முதல் தமிழக வெற்றிக் கழக கொடி பறக்கும்; இனி தமிழ்நாடு சிறக்கும் : த.வெ.க. தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். கட்சியின் தலைமை நிலையச் செயலகத்தில் கொடி பாடலை வெளியிட்டு கொடியை ஏற்றிவைப்பதாக விஜய் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். "சரித்திரத்தின் புதிய திசையாகவும் புதிய விசையாகவும் ஒவ்வொரு நாளும் அமைந்தால் அது ஒரு பெரும் வரம் என்றும், தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய அடையாளமான நாள்தான் கொடி அறிமுகமாகும் நாள் என்றும் விஜய் குறிப்பிட்டுள்ளார்.
வேலூர் மாவட்டம் கே.வி. குப்பத்தில் இரு பிரிவினரிடையேயான சாதிய மோதலில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கோயில் இடிக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்தது. இது தொடர்பாக 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்தநிலையில், இரு சமூகத்தினர் முன்னிலையில், கோயில் இடிக்கப்பட்ட இடத்தில் சிலை பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது.
மத்திய நிதி நிலை அறிக்கையில் தமிழகத்திற்கான பெருமளவு நிதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய அரசுடன் என்ன நெருக்கம் இருக்கிறது என திமுக எம்.பி. கனிமொழி எதிர்க்கட்சிகளுக்கு கேள்வி எழுப்பினார்.
Manu Bhaker Chennai Visit: ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற இந்திய துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனை மனு பாக்கர், சென்னையில் நடந்த பாராட்டு விழாவில் கலந்துகொண்டார்.
Armstrong Murder Case: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக ரஜினி படத்தை இயக்கிய பிரபல திரைப்பட இயக்குநரின் மனைவி மோனிஷாவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு குறித்த புகாரின் அடிப்படையில் பள்ளி தாளாளர் உள்ளிட்ட 11 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள், சிறப்பு முகாம்கள் நடத்த முன் அனுமதி பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சரயு பேசுகையில் தெரிவித்துள்ளார்.
Walk For Plastic: பிளாஸ்டிக் இல்லாத எதிர்காலத்திற்கு அனைவரும் கைக்கோர்த்து செயல்பட வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக 200க்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் சென்னையில் மேற்கொண்ட நடைபயணம் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
Tamil Nadu Crime News: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தனியார் பள்ளியில் நடந்த என்சிசி முகாமில், என்சிசி பயிற்சியாளர் 8ஆம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கியுள்ளார். மேலும், 12 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததும் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.
ஒசூர் அருகே முன்விரோதத்தால் இருசக்கர வாகனத்தை இடித்து தள்ளி முதியவரை சரமாரியாக வெட்டிக்கொலை செய்த கும்பல் தலைமறைவாகியுள்ளது. இந்த சம்பவத்தின் பின்னணி என்ன என்பதை காணலாம்.
கோவை அரசு மருத்துவமனையில் வடமாநில வாலிபர் ஒருவர், பெண் மருத்துவரிடம் அத்துமீறியதாகக் கூறி மருத்துவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். என்ன நடந்தது என்பதை விரிவாக காணலாம்.
திமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடந்தது. திமுகவின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் (MK Stalin) தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது.
78 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, நெல்லையப்பர் கோவில் முன்பு ஏற்றப்பட்ட தேசியக் கொடிக்கு கோவில் யானை காந்திமதி தும்பிக்கையை உயர்த்தி, பிளிறி தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தியது.
Tamil Nadu News: சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆளுநர் மாளிகையில் இன்று மாலை வழங்கும் தேநீர் விருந்தில் அரசு சார்பில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யூடியூபர் சவுக்கு சங்கருக்கு எதிரான 16 வழக்குகளின் விசாரணைக்கும், அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சரித்திர பதிவேடு குற்றவாளி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், 6 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தின் பின்னணி என்ன என்பதை காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.