ஜூலை 1 முதல் 15 வரை தொடங்க திட்டமிடப்பட்டிருந்த 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்ய சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது என்று உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை (ஜூன் 25, 2020) தெரிவித்தது.
12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகள் (CBSE Exam) ரத்து செய்யவேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய, இந்த வழக்கின் இறுதி முடிவு அறிந்துக்கொள்ள, வியாழக்கிழமை பிற்பகல் 2 மணி வரை காத்திருக்க வேண்டியிருக்கும்.
இந்திய-சீன எல்லை நிலைப்பாட்டின் சிக்கல்களுக்கு மத்தியில், அயோத்தியில் கோவில் கட்டுமானத்தை தொடங்குவதற்கான திட்டத்தை ராம் மந்திர் அறக்கட்டளை இடைக்காலமாக நிறுத்தி வைத்துள்ளது.
ஜூலை 1 முதல் மீதமுள்ள தேர்வுகளை நாடு முழுவதும் 1500 மையங்களில் நடத்தப்போவதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. மீதமுள்ள தேர்வுகளை ரத்து செய்யக் கோரி பெற்றோர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
பிற மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் கிராமங்களுக்கு வீடு திரும்புவதற்காக ரயில் அல்லது பேருந்துகளை பயன்படுத்தும் போது அவர்களிடம் பயண கட்டணம் வசூலிக்க கூடாது என உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது.
COVID-19-ஆல் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இலவசமாக அல்லது பெயரளவு செலவில் சிகிச்சை தறக்கூடிய தனியார் மருத்துவமனைகளை அடையாளம் காணுமாறு உச்ச நீதிமன்றம் மத்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளது.
நீட் மூலம் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு எடுக்கப்பட்ட முடிவு சரியானது. தனியார் நிறுவனங்களின் வர்த்தகம் மற்றும் வணிகத்திற்கான அரசியலமைப்பு உரிமையில் நீட் தலையிடுகிறது என்ற கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
பொதுமக்களுக்கு இலவசமாக கொரோனா பரிசோதனை நடத்த வேண்டும் என்ற முந்தைய உத்தரவை மாற்றியது உச்சநீதிமன்றம். தற்போது ஏழை மக்களுக்கு மட்டுமே இலவச கொரோனா சோதனை நடத்தப்படும் என அறிவித்துள்ளது.
அரசு மற்றும் தனியார் கண்டறியும் ஆய்வகங்களில் கொரோனா வைரஸ் சோதனைகள் இலவசமாக நடத்தப்படுவதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றுநோயை எதிர்த்து போராட PM CARES நிதிக்கு பலர் தங்களால் முடிந்த அளவுக்கு நிதி உதவி அளித்து வருகின்றனர். அந்த வரிசையில், தற்போது உச்சநீதிமன்ற அதிகாரிகளும் தங்கள் பங்களிப்பை செய்துள்ளனர்.
பிஎஸ் -4 வாகனங்களை 2020 மார்ச் 31 வரை விற்க மத்திய அரசாங்கம் அனுமதி அளித்து. 2020 ஏப்ரல் 1 முதல் பிஎஸ் -6 வாகனங்களை விற்கவோ பதிவு செய்யவோ தடை விதித்து மத்திய அரசு மாநில அரசுகளுக்கு உத்தரவு பிறப்பித்தது.
21 நாள் ஊரடங்கு உத்தரவு காலத்தில் வேலைகள் மற்றும் தங்குமிடம் இல்லாமல் ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு நிவாரணம் கோரும் மனுவை உச்ச நீதிமன்றம் விசாரித்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.