Maharastra Kids Sexual Assualt: மகாராஷ்டிராவில் நான்கு வயதான இரண்டு சிறுமிகளுக்கு 23 வயதான இளைஞர் பாலியன் வன்கொடுமைக்கு உள்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடலூரில் மின் கட்டண உயர்வைக் கண்டித்து மின்சாதன பொருட்களுக்கு பூ வைத்தும், கற்பூரம் காட்டியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டு கட்சியினர் நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.
Bangladesh Protests: வங்கதேசத்தில் மாணவர்களின் போராட்டத்தால் எழுந்த கலவரத்தால், பதற்ற நிலை நீடிக்கும் நிலையில், அங்கிருந்து சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தியா திரும்பினர்.
நாகையில் கள்ளச்சாராயத்திற்கு எதிராக தேமுதிக நடத்திய ஆர்ப்பாட்டத்தில், போதை ஆசாமி ஒருவர் செய்த அட்டூழியத்தால் போலீசாரே கிறு கிறுத்தனர். அப்படி அந்த போதை ஆசாமி செய்தது என்ன? என்பதை இதில் காணலாம்.
கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயத்தால் 35-க்கும் அதிகமான உயிர்கள் பலியான நிலையில், தகுந்த நடவடிக்கை எடுக்காத திமுக அரசைக் கண்டித்து வரும் 22-ஆம் தேதி மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெறும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் சோலார் பவர் பிளான்ட் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், கிராம மக்கள் ஏற்றுக்கொண்டால் மட்டுமே திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இருக்கன் துறை பகுதிகளில் கல்குவாரிகளால் விவசாய நிலங்கள் பயிர் செய்ய முடியாத அளவில் மலடாகியுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பல்லவர்மேடு அருந்ததி பாளையம் பகுதியில் கழிவுநீர் பிரச்சினைக்கு உரிய நடவடிக்கை எடுக்காததை கண்டித்து மாமன்ற உறுப்பினர் தலைமையில் அப்பகுதி மக்கள் திடீர் சாலை மறியல் செய்தனர்.
மதுரை மாவட்டம் மேலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், வன்கொடுமைகளுக்கு எதிராக அக்கட்சியின் மாவட்ட செயலாளர் அரச முத்துபாண்டியன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் வாயிலில் 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கம் சார்பில் காத்திருப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதியில் உள்ள நெசவுத் தொழிலாளர்கள் 11 பகுதியை சேர்ந்தவர்கள் சுமார் 10,000 நெசவுத் தொழில் செய்து வருபவர்கள் கூலி உயர்வு கேட்டு கடந்த 10 ஆண்டு காலமாக போராடி வருகின்றனர் இந்த நிலையில், இவர்கள் கடந்த 10 நாட்களாக நெசவுத்தொழில் நிறுத்தி கூலி உயர்வு கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இலங்கை கடற்படையால் மீனவர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.