இந்தியா - இங்கிலாந்து இடையேயான வரலாற்று சிறப்புமிக்க கலாச்சார ஆண்டு விழாவில் நடிகர் கமல் கலந்து கொண்டார்.
இந்தியா-இங்கிலாந்து இடையேயான கலாச்சார ஆண்டு விழா லண்டனில் உள்ள பக்கிங்காம் அரண்மனையில் துவங்கியுள்ளது. இந்த வரலாற்று சிறப்புமிக்க கலாச்சார ஆண்டு விழாவில் இந்தியா சார்பில் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, திரை நட்சத்திரங்கள் கமல், சுரேஷ் கோபி, குர்தாஸ் மன், முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் கபில் தேவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ராயல் குடும்பம் என்பதால், விருந்தினர்களுக்கு பிரமாண்ட வரவேற்பும், விருந்தும் அளிக்கப்பட்டது.
இந்திய அணி 7 விக்கெட்டெக்கு 147 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி இன்று மாலை 4.30 மணிக்கு கான்பூரில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் மோர்கன் டெஸ் பீல்டிங் தேர்வு செய்தார். இதனால் முதலில் இந்திய அணி பேட்டிங் செய்தது.
இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டெக்கு 147 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய சார்பில் அதிகபட்சமாக டோனி 36 ரன்களும், சுரேஷ் ரெய்னா 34 ரன்களும் எடுத்தன.
இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி புனேயில் நாளை நடக்கிறது.
இந்தியாவுடன் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இங்கிலாந்து பங்கேற்கிறது. முதலாவது ஒரு நாள் போட்டி புனேயில் நாளை நடக்கிறது. இதையொட்டி இரு அணியினரும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் 3-வது உலக கோப்பை கபடி போட்டி நடைபெற்று வருகிறது. 2 முறை சாம்பியனான இந்திய அணி கடைசி லீக் ஆட்டத்தில் இங்கிலாந்தை நேற்று எதிர்கொண்டது. இந்திய அணி 69-18 என எளிதாக வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. அரையிறுதிக்கு முன்னேறியுள்ள இந்திய அணிக்கு பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் ட்விட்டரில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் 3-வது உலக கோப்பை கபடி போட்டி நடைபெற்று வருகிறது. இந்திய அணியும் இங்கிலாந்து அணியும் மோதுகின்றன. இந்த போட்டி இன்று இரவு 9 மணிக்கு நடைபெறுகிறது.
இங்கிலாந்தை வீழ்த்தி 4-வது வெற்றியை பெற்று அரை இறுதிக்குள் நுழையும் ஆர்வத்தில் உள்ளது. ‘ஏ’ பிரிவில் உள்ள இந்தியா 16 புள்ளியுடன் 2-வது இடத்தில் உள்ளது. தென் கொரியாவிடம் தோற்று இருந்தது. ஆஸ்திரேலியா, வங்காளதேசம், அர்ஜென்டினாவை வீழ்த்தி இருந்தது. இந்த பிரிவில் தென்கொரியா 25 புள்ளியுடன் அரை இறுதிக்கு ஏற்கனவே தகுதி பெற்று விட்டது.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து உலக கோப்பையை வெல்லும் என அந்நாட்டைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் பியர்ஸ் மார்கன் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக்கிடம் ரூபாய் 10 லட்சம் பெட் கட்டியுள்ளார்.
இந்த ஆட்டம் டிராவில் முடிந்ததைத் தொடர்ந்து மைதானத்திற்கு வெளியே ரகளையில் ஈடுபட்ட இங்கிலாந்து மற்றும் ரஷ்ய ரசிகர்கள் ஆட்டம் முடிந்ததும் மைதானத்திற்குள்ளும் வன்முறையில் குதித்தனர். இரு தரப்பினரும் மோதிக்கொண்டதுடன், ஒருவரையொருவர் பாட்டில்களாலும், நாற்காலிகளாலும் தாக்கிக்கொண்டனர். கேலரியின் ஒரு பகுதிக்கு தீ வைத்தனர். இந்த சம்பவத்தில் 35க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரைப் பீய்ச்சியடித்தும் இவர்களை கலைத்தனர்.
ரூ.9000 கோடி வங்கிகளில் கடன் வாங்கி கொண்டு திருப்பிச் செலுத்தாத இந்தியாவின் தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க பிரிட்டன் மறுப்பு தெரிவித்துள்ளது.
இங்கிலாந்து வெளியுறவுத்துறை கூறியது விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளது.
விஜய் மல்லையாவை ஒப்படைப்பதில் சட்ட சிக்கல்கள் இருப்பதாகவும், மேலும் பிரிட்டனின் 1971–ம் ஆண்டு சட்டப்படி பிரிட்டனில் இருக்கும் ஒருவர் செல்லுபடியாகத்தக்க பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும் என அவசியமில்லை என கூறியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.