ஐபிஎல் போட்டிகளில் இருந்து தோனி விடை கொடுப்பதற்கு இந்த ஆண்டு சரியான நேரம் என இந்த 3 காரணங்களின் அடிப்படையில் கூறலாம். அவர் ஏற்கனவே ஓய்வு குறித்து தெரிவித்துவிட்ட நிலையில், எப்போது அறிவிப்பார் என்பது மட்டுமே சஸ்பென்ஸாக இருக்கிறது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தை போட்டிகள் அல்லாதபோது நேரில் பார்வையிட அனுமதிக்க தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் முடிவெடுத்துள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தல எம்எஸ் தோனி பைசெப்களை காட்டிக் கொண்டு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி எடுக்கும் புகைப்படத்தை பார்த்த சிஎஸ்கே ரசிகர்கள் தோனிக்கு நிஜமாகவே 41 வயதாகிறதா? என வியப்புடன் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுட்டிக் குழந்தையாக இருந்த சாம் கரண் இந்த ஆண்டு மீண்டும் தன்னுடைய முன்னாள் அணியான பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாட இருக்கிறார்.
ஐபிஎல் 2023 தொடர் விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் ஜியோ சினிமாவில் பேசிய சுரேஷ் ரெய்னா, ஐபிஎல் தொடரில் ஆல்டைம் மிகச்சிறந்த பந்துவீச்சாளர் மலிங்கா என கூறியுள்ளார். பும்ராவின் வளர்ச்சியில் மலிங்காவின் பங்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தோனி ஹூக்கா விரும்பி புகைப்பிடிப்பார் என ஐபிஎல் தொடரில் அவருடைய சக அணி வீரராக இருந்த ஜார்ஜ் பெய்லி தெரிவித்துள்ளார். எப்போதும் திறந்த மனதுடன் இருக்கும் தோனி இளைஞர்களுக்கு நல்ல வழிகாட்டி எனவும் புகழாரம் சூட்டியுள்ளார்.
Top T20 Cricket Leagues Of World: உலகின் தலைசிறந்த டி20 கிரிக்கெட் லீக்குகள் குறித்த தகவல்களை தெரிந்துக் கொள்வோம். கிரிக்கெட்டின் வடிவம் முற்றிலும் மாறி பொழுதுபோக்கு காரணங்களுக்காக T-20 அறிமுகப்படுத்தப்பட்டது....
ஐபிஎல் 2023-ல் இந்த ஆண்டு முதல் புதிய விதிமுறை நடைமுறைக்கு வர இருக்கிறது. அம்பயர்கள் தவறாக நோபால் மற்றும் வைடு கொடுத்தால் அல்லது கொடுக்கவில்லை என்றால் அதனை எதிர்த்து அப்பீல் செய்யலாம்.
Cricket Funny Video: உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் பவுலர் அவுட் அப்பீல் செய்தவுடன் யோசிக்க ஆரம்பித்த அம்பயர், பவுலர் அடுத்த பந்து வீச வரும்போது அவுட் கொடுத்த விநோத சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த விநோத அவுட் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
ஷேன் வார்னேவுக்கு முதலாமாண்டு நினைவஞ்சலி கடைபிடிக்கப்படும் நிலையில், அவர் இந்திய அணிக்கான ராக்ஸ்டார் ஆல்ரவுண்டரை கண்டுபிடித்து கொடுத்த சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்எஸ் தோனி ஐபிஎல் தொடருக்கான பயிற்சியை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கினார். அவரைக் காண ரசிகர்கள் மைதானத்தை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
தோனிக்குப் பிறகு சிஎஸ்கே நிர்வாகம் ஒட்டு மொத்த நம்பிக்கையையும் பென் ஸ்டோக்ஸ் மீது வைத்துள்ளது. அவர் இந்த ஐபிஎல் தொடரில் முழுமையாக விளையாடுவாரா? என்ற கேள்வி எழுந்திருக்கும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் இது குறித்து விளக்கம் அளித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.