சென்னை: சாலை விபத்து மற்றும் பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த நபர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் வழங்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு.
அதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
சாலை விபத்து மற்றும் எதிர்பாராத விதமாக நடந்த பல்வேறு விபத்துகளில் சிக்கி உயிரிழந்த மேற்கொண்ட 9 நபர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்களையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
சாலை விபத்து மற்றும் பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 9 நபர்களின் குடும்பத்திற்கு தலா 1 லட்சம் ரூபாய் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட தமிழக முதலமைச்சராகிய நான் உத்தரவிட்டுள்ளேன் எனக் கூறியுள்ளார்.

