நம் வீட்டில் பலர் நாய், பூனை உள்ளிட்ட செல்லப்பிராணிகளை ஆசை ஆசையாய் வளர்ப்பது உண்டு. அது நமக்கு மன ரீதியாக நிம்மதியை தருகிறது. நமது வீட்டில் ஒருவரை போல அதை பார்த்துக்கொள்வது உண்டு. சிலர் வாஸ்து சாஸ்திரத்திற்காக சில பிராணிகளை வளர்ப்பர். அது செல்வத்தையும் மகிழ்ச்சியையும் அள்ளித் தருவதாக அவர்கள் நம்புகின்றனர். அப்படி எந்தெந்த பிராணிகள் வளர்த்தால் செல்லம் செழித்து மகிழ்ச்சி பெருகும் என்பதை இத்தொகுப்பில் பார்க்கலாம்.
பூனை
பொதுவாக பூனை குறுக்கே சென்றால் கேட்ட சகுனமாக பார்க்கப்படுவது வழக்கம். ஆனால் வாஸ்து சாஸ்திரத்தின்படி, பூனை வளர்ப்பது மங்களரமானதாக உள்ளது. வாஸ்து நம்பிக்கையின் படி பூனை அதிர்ஷ்டத்தை தருவதாக பார்க்கப்படுகிறது. அதிலும் தங்க நிற பூனை வைத்திருப்பது மிகவும் அதிர்ஷ்டமாக பார்க்கப்படுகிறது. அதேபோல் பூனை வளர்த்தால் பண வரவு அதிகரிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
கிளி
வாஸ்து சாஸ்திரத்தின் படி, கிளி வைத்திருப்பது மிகவும் நல்லதாக கருதப்படுகிறது. இது உங்களது வீட்டில் நேர்மறையாக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. குடும்பத்தில் மகிழ்ச்சியை கொண்டு வருகிறது. கிளியை எப்போதும் வீட்டின் வடக்கு அல்லது கிழக்கு திசையில் வைக்க வேண்டுமாம்.
இதன் மூலம் பல நன்மைகள் வந்துசேர்கிறது. அதோடு உங்கள் கிளி மகிழ்ச்சியாக இருக்கும்போதுதான் மகிச்சியும் செழிப்பும் வரும் என கருதப்படுகிறது. சாஸ்திர நம்பிக்கையின்படி, கிளி மகிழ்ச்சியாக இல்லாத வீட்டில் எதிர்மறையாக விளைவுகள் அதிகரிக்கும் என கருப்படுகிறது.
மீன்
மீன் வளர்ப்பது பலர் வீட்டின் அழகிற்காக வளர்ப்பர். சிலர் அதன் மீதுள்ள ஆர்வத்தால் வளர்ப்பர். சிலர் வாஸ்து சாஸ்திரத்திற்க்காக வளர்ப்பர். மீன் வகையிலேயே வாஸ்து மீன் என்றே தனியாக இருப்பதை நாம் பார்த்திருப்போம். அப்படியான வாஸ்து மீன் வளர்ப்பது அதிர்ஷ்டத்தையும் செழிப்பையும் அதிகரிக்க செய்கிறது.
பசு
இந்து மதத்தில் பசுவுக்கு தாயின் அந்தஸ்து வழங்கப்படுகிறது. வாஸ்துவின்படி, வீட்டில் ஒரு பசுவை வளர்ப்பதன் மூலம், தெய்வங்களின் ஆசீர்வாதம் எப்போதும் நிலைத்திருப்பதாக பார்க்கப்படுகிறது. வீட்டில் பசு வளர்க்காவிட்டால் அதற்கு சேவை செய்வதில் பங்களிக்கலாம். மகிழ்ச்சி மற்றும் செழிப்புக்காக தினமும் பசுவிற்கு உணவு அளிக்கலாம்.
மறுப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தீர்வுகள்/ பயன்கள்/ஆலோசனை மற்றும் கூற்றுகள் பொதுவான தகவல்கள் மட்டுமே. இந்த கட்டுரை அம்சத்தில் எழுதப்பட்டுள்ள விஷயங்களை ஜீ தமிழ் நியூஸ் ஆதரிக்கவில்லை. வாசகர்கள் இந்த தகவல்களை இறுதி உண்மையாகவோ அல்லது கூற்றாகவோ கருதாமல் தங்கள் விருப்புரிமையை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் படிங்க: SBI UPI வரம்பை நிமிடங்களில் அதிகரிக்கலாம்: இப்படி செய்தால் போதும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ