PM கிசான் சம்மான் நிதி... உங்கள் கணக்கில் பணம் வந்துவிட்டதா என்பதை அறிய

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதியின் 19வது தவணைக்கான காத்திருப்பு இன்றுடன் முடிவடைகிறது. பிரதமர் கிசான் பயனாளிகளின் கணக்கில் 19வது தவணையாக ரூ.22 ஆயிரம் கோடியை பிரதமர் நரேந்திர மோடி வெளியிடுகிறார்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 24, 2025, 01:27 PM IST
  • விவசாயிகளுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் நிதியுதவி.
  • கிசான் சம்மான் நிதி திட்டத்தில் எத்தனை விவசாயிகள் பலன் பெறுவார்கள்?
  • கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளதா என்ற நிலையை எவ்வாறு சரிபார்க்கலாம்?
PM கிசான் சம்மான் நிதி... உங்கள் கணக்கில் பணம் வந்துவிட்டதா என்பதை அறிய title=

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதியின் 19வது தவணைக்கான காத்திருப்பு இன்றுடன் முடிவடைகிறது. பிரதமர் கிசான் பயனாளிகளின் கணக்கில் 19வது தவணையாக ரூ.22 ஆயிரம் கோடியை பிரதமர் நரேந்திர மோடி வெளியிடுகிறார். PM கிசான் தவணை உங்கள் கணக்கில் வந்துள்ளதா இல்லையா என்பதை நீங்கள் எவ்வாறு சரிபார்க்கலாம் என்பதை அறிந்து கொள்ளலாம்.

PM கிசான் தவணை பணம் கணக்கில் வந்து விட்டதா என்பதை எவ்வாறு சரிபார்க்கலாம்?

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனாவின் பயனாளியாக இருந்து, PM கிசானின் 19வது தவணை உங்கள் கணக்கில் வந்துவிட்டதா இல்லையா என்பதைச் சரிபார்க்க விரும்பினால், இந்த வேலையை நீங்கள் வீட்டில் உட்கார்ந்து சிறிது நேரத்தில் செய்யலாம். இதற்கு நீங்கள் PM Kisan ஆன்லைன் இணையதளத்தைப் பார்க்க வேண்டும். உங்கள் தவணையின் நிலையை நீங்கள் எங்கே பார்க்க முடியும் என்பதற்கான படிப்படியான செயல்முறை கீழே விளக்கப்பட்டுள்ளது.

பிரதமர் கிசான் யோஜனாவில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளதா என்ற நிலையை எவ்வாறு சரிபார்க்கலாம்?

1. முதலில் நீங்கள் PM Kisan pmkisan.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிட வேண்டும்.

2. இதற்குப் பிறகு, முகப்புப் பக்கத்தில் “Know Your Status” என்ற விருப்பத்தைக் காண்பீர்கள், அதைக் கிளிக் செய்யவும்.

3. இப்போது “Beneficiary Status” விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

4. ஒரு புதிய பக்கம் உங்கள் முன் திறக்கும். பதிவு எண் அல்லது மொபைல் எண்ணை இங்கே உள்ளிடவும்.

5. கேப்ட்சா குறியீட்டை நிரப்பி, "Get Data" என்பதைக் கிளிக் செய்யவும்.

6. உங்கள் நிலை உங்களுக்கு முன்னால் உள்ள திரையில் தெரியும்.

7. தவணைப் பணம் விடுவிக்கப்பட்டிருந்தால், "Payment Successfully Credited" என்ற செய்தியைப் பெறுவீர்கள்.

மேலும் படிக்க | LIC ஸ்மார்ட் பென்ஷன் திட்டம்... ஓய்வூதியம் பெற ஒரு முறை ப்ரீமியம் செலுத்தினால் போதும்

பிஎம் கிசான் நிதி உதவி திட்டத்தில் ரூ.6 ஆயிரம் உதவி

பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ், தேவைப்படும் மற்றும் தகுதியான விவசாயிகளுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் நிதியுதவி வழங்குகிறது. இந்தப் பணம் ஒரு வருடத்தில் மூன்று சம தவணைகளில் பயனாளிகளின் கணக்குகளுக்கு அனுப்பப்படுகிறது. இதுவரை, இத்திட்டத்தின் 18 தவணைகளுக்கான பணம் DBT மூலம் அனுப்பப்பட்டுள்ளது. 19வது தவணையான ரூ.2000க்கான விவசாயிகளின் காத்திருப்பு இன்றுடன் முடிவுக்கு வந்தது.

கிசான் சம்மான் நிதி திட்டத்தில் எத்தனை விவசாயிகள் பலன் பெறுவார்கள்?

கடந்த முறை கிசான் சம்மான் நிதித் திட்டத்தின் மூலம் 9.6 கோடி விவசாயிகள் பயன் பெற்றனர். இம்முறை இந்த எண்ணிக்கை 9.8 கோடியாக அதிகரித்துள்ளது என தரவுகள் கூறுகின்றன. விவசாயிகளின் கணக்குகளுக்கு இதுவரை 3.86 லட்சம் கோடி ரூபாய் அனுப்பப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | PM கிஸான் நிதி இன்று விடுவிப்பு... பயனாளிகள் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை அறிய

மேலும் படிக்க | ஓய்வு காலத்தில் ஹேப்பியாக இருக்க... இந்த 4 திட்டங்கள் கைக்கொடுக்கும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News