காவல்துறையின் தடியடியால் காயமடைந்த காசிமேடு மீனவர்களை இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.
கடந்த 23-10-2017 அன்று விசைப் படகுகளில் அதிவேக சீன இன்ஜின் பயன்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, காசிமேட்டில் மீனவர்கள் காலையிலிருந்து மூன்று மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தைக் கலைக்க சாலை மறியலில் ஈடுபட்ட மீனவர்கள் மீது காவல்துறையினர் கடுமையான தடியடி நடத்தினார்கள். இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் காயமடைந்தனர்.
தமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி 4 பேரை இலங்கை கடற்படை கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்கின்றனர். இதுகுறித்து மத்திய, மாநில அரசுகளிடம் பலமுறை வலியுறுத்தியும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
இதனால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தமிழக மீனவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் இலங்கையின் பருத்தித் துறை கடற்பகுதியில், எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி, நாகை மீனவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்படையால் நேற்று கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்கக் கோரி புதுக்கோட்டை மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
மேலும் மீனவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்து உள்ளனர் இலங்கை கடல்படை. இதுகுறித்து மத்திய, மாநில அரசுகளிடம் பலமுறை வலியுறுத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட 49 மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரி, புதுக்கோட்டை மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட 77 தமிழக மீனவர்கள் இன்று தாயகம் திரும்புகிறார்கள்.
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 77 தமிழக மீனவர்களை நேற்று இலங்கை அரசு விடுதலை செய்தது. விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் இன்று தாயகம் திரும்புவார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது.
எல்லை தாண்டி வந்ததாக இலங்கை கடற்படை தமிழக படகுகளுக்கு ரூ.20 கோடி வரை அபராதம் விதிக்கும் சட்ட மசோதா இலங்கை பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் ராமேசுவரத்தில் நடைபெற்ற அனைத்து மீனவர்கள் சங்க கூட்டத்தில் இலங்கையின் தீர்மானத்திற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
மேலும் இலங்கை சிறையில் தவிக்கும் தமிழக மீனவர்கள் மற்றும் சிறைபிடிக்கப்பட்ட 141 படகுகளை விடுவிக்க வலியுறுத்தியும் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்வது என்றும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
போராட்டம் குறித்து மீனவர் சங்க தலைவர்கள் கூறுகையில்:-
தமிழக மீனவர்களுக்கு எதிராக இலங்கை அரசு கொண்டு வர இருக்கும் அநீதியான சட்டத்தை திரும்பப் பெற அழுத்தம் தர வேண்டும் என்று மத்திய அரசை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார்.
அதைக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
தமிழக மீனவர்களுக்கு எதிராக கடற்தொழில் சட்டதிருத்த மசோதா இலங்கை பார்லிமென்டில் இலங்கை மீனவளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீரா இன்று தாக்கல் செய்யப்பட்டது.
இலங்கை பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த புதிய சட்ட திருத்தத்தின்படி இலங்கை கடற்பகுதியில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களுக்கு ரூ.2 கோடி முதல் ரூ.20 கோடி வரை அபராதம் விதிக்கப்படும். மேலும் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழக மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
நெடுந்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்தது.
கைதான 8 பேரையும் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று, அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றது.
மேலும் தமிழக மீனவர்களின் இரு படகுகளையும், இலங்கை கடற்படை பறிமுதல் செய்தது.
தமிழக மீனவர்களின் 42 படகுகளை நிபந்தனையுடன் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்படையினரால் கடந்த இரண்டரை ஆண்டுகளில் 950-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டனர். 145 படகுகள் கைப்பற்றப்பட்டன.
தற்போது 11 தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர். 145 படகுகளும் இலங்கை கடற்படை வசம் உள்ளன.
இந்நிலையில் இலங்கை மீன் வளத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர, கொழும்பில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியது:-
தமிழகத்தில் மீன்களின் இனப்பெருக்கத்துக்காக விதிக்கப்பட்ட 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் இன்று முதல் முடிவுக்கு வருகிறது.
மீன்பிடித் தடைக்காலம் முடிந்துவிட்டதால், ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்குள் செல்ல உற்சாகமாகத் தயாராகிவருகின்றனர்.
ஏப்ரல் 15-ம் தேதி முதல் மே 30-ம் தேதி வரை மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்தத் தடையை, கடந்த ஆண்டு மத்திய அரசு 60 நாளாக உயர்த்தியது.
அதன்படி ஜூன் 14 வரை மீன்பிடித் தடைக்காலம் நீட்டிக்கப்பட்டது. இதற்காக, மீனவர்களுக்கு நிவாரணத் தொகையாக ரூபாய் 5,000 வழங்கப்படுகிறது.
தமிழக மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க இலங்கை அரசை வற்புறுத்த வேண்டும் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மாநில அரசு கடிதம் எழுதுவதோடு நிறுத்திக் கொள்கிறது.
இலங்கை சிறையிலுள்ள தமிழகத்தைச் சேர்ந்த 38 மீனவர்களை விடுதலை செய்ய, அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களை கைதுசெய்வதும், தாக்குதல் நடத்துவதும், படகுகளை பிடித்து வைத்துக்கொள்ளவது என தொடர்ந்து வருகிறது. எனவே இலங்கை சிறையிலுள்ள மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி மீனவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்.
குஜராத்தை சேர்ந்த 100 மீனவர்களை பாகிஸ்தான் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
பாகிஸ்தான் கடல் பகுதியில் இந்திய மீனவர்கள் நுழைந்து மீன் பிடித்ததாக பாகிஸ்தான் விசாரணை அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ரிமாண்ட் செய்யப்படுவார்கள்.
கட்ச் மாவட்டம் ஜாகு பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த இந்திய மீனவர்களை, தங்கள் எல்லைக்குள் மீன்பிடித்ததாக கூறி கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். ஜெகதாப்பாட்டினத்தில் இருந்து 176 விசைப்படகுகளில் மீனவர்கள் நேற்று கடலுக்கு சென்றனர். இந்நிலையில் எல்லை தாண்டி நெடுந்தீவு அருகே மீன்பிடித்ததாக கூறி 2 விசைப்படகுகளையும் 12 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர்.
மீனவர்களையும் படகுகளையும் காங்கேசம் துறைமுகத்திற்கு கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. ஏற்கனவே 26 மீனவர்களா சிறைபிடித்துச் சென்றுள்ள நிலையில் தற்போது மேலும் 12 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக இலங்கை அரசின் விசாரணை அறிக்கை கிடைத்த பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என மீனவர்களிடம் மத்திய அமைச்சர் நிர்மலா போராட்டத்தில் கூறியுள்ளார்.
மீனவர் பிரிட்ஜோ சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக இலங்கை அரசு விசாரணை நடத்தி வருகிறது. இலங்கை அரசின் விசாரணை முடிந்த பின்னர் அனைத்து நடவடிக்கைகளையும் இந்தியா எடுக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ராமேசுவரம், பாம்பன் மீனவர்கள், நாகை மீனவர்கள், ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் மொத்தம் 85 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு கடந்த 2 மாத காலமாக அங்குள்ள சிறைகளில் அடைக்கப்பட்டு இருந்தனர்.
இந்நிலையில் ராமேசுவரம் மீனவர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து தமிழக மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த பதற்றத்தை தணிக்கும் வகையில், இலங்கை சிறைகளில் இருந்து 85 மீனவர்களையும் விடுதலை செய்ய அந்நாட்டு அரசு முன் வந்தது.
இலங்கை கடற்படை தாக்குதலில் படுகாயமடைந்த மீனவர் செரோனுக்கு இன்று சீமான் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
இதைக்குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பில் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.