வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை இல்லாதவர்கள், வேறு ஏதாவது அவர்களின் அடையாள அட்டையை ஒன்றை காண்பிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் ஆணையிட்டுள்ளது. இதைக்குறித்து தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்
அந்த அறிக்கையில் கூறியதாவது:-
வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைக்கு பதிலாக கீழ்கண்ட அடையாள அட்டையை ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம்.
* ஆதார் அட்டை
* பாஸ் போர்ட்
* டிரைவிங் லைசென்சு
தமிழகத்தில் 3 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வாக்குப்பதிவு வரும் நவம்பர் மாதம் 19-ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் ஒபாமாவின் பதவிக்காலம் முடிய உள்ளதால், அவருக்கு பதிலாக புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நவம்பர் மாதம் 8-ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி, ஜனநாயக கட்சி ஆகிய இருபெரும் கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்கள் அங்குள்ள மாகாணங்களில் நடந்து வருகின்றன.
அதிபர் ஒபாமா ஹிலரிக்கு வெளிப்படையாக தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். அதிபர் பதவிக்கு ஹிலரியை விட தகுதியானவர்கள் யாரும் இல்லை என்று பாராட்டியும் உள்ளார். ஹிலரியுடன் இணைந்து நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரத்திற்குச் செல்ல ஆர்வத்துடன் காத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
இந்தியா முழுவதும் 57 எம்.பி.க்களின் பதவிக்காலம் வரும் மாதத்துடன் நிறைவடைகிறது. எனவே காலியான இடங்களுக்கு ஜூன் 11-ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதற்கான வேட்புமனு தாக்கல் மே 24-ம் தேதி தொடங்குகிறது. ஒரு மாநிலங்களவை உறுப்பினர் வெற்றி பெற 34 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை.
அதிமுக நான்கு வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. அதிமுக 134 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால் 3 இடங்களில் அதிமுக எளிதாக வெற்றி பெறும். 4-வது வேட்பாளருக்கும் போட்டி இருக்கும் என தெரிகிறது.
தமிழக தேர்தலில் எதிர்பார்க்கப்பட்ட முடிவுகள் தலைகீழாக மாறியுள்ளன. இதற்கான காரணங்கள் என்ன? தமிழக தேர்தலில் நடந்தவை என்ன?
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தேர்தலில் தோல்வியடைந்தது எதனால்? என்பவற்றை அரசியற்களம் வட்ட மேசையில் சிரேஸ்ட சட்டவாளரும் ஊடகவியலாளருமான எம்.எம்.நிலாம்டீன் விளக்குகிறார்.
தமிழக தேர்தலில் எதிர்பார்க்கப்பட்ட முடிவுகள் தலைகீழாக மாறியுள்ளன. இதற்கான காரணங்கள் என்ன? தமிழக தேர்தலில் நடந்தவை என்ன?
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தேர்தலில் தோல்வியடைந்தது எதனால்? என்பவற்றை அரசியற்களம் வட்ட மேசையில் சிரேஸ்ட சட்டவாளரும் ஊடகவியலாளருமான எம்.எம்.நிலாம்டீன் விளக்குகிறார்.
ஜெயலலிதா மீண்டும் முதல்-அமைச்சராக வரும் 23-ம் தேதி பதவி ஏற்க இருக்கிறார். அவருடன் மற்ற அமைச்சர்களும் பதவி ஏற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
234 தொகுதிகளை கொண்ட தமிழக சட்டசபைக்கு 2 தொகுதிகளை தவிர மற்ற தொகுதிகளுக்கு மே16-ந் தேதி தேர்தல் நடந்தது. 232 தொகுதிகளிலும் 74.26 சதவீத வாக்குகள் பதிவாயின. மழையினால் வாக்கு சதவித சற்று குறைந்துவிட்டது. மே 19ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் அமைக்கப்பட்டு இருந்த 68 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
வாக்கு எண்ணிக்கையில் அதிமுக தொடர்ந்து முன்னணியில் இருந்து வருவதால் தொண்டர்கள் மகிழ்சியில் உள்ளனர்.
அதிமுக அலுவலகம் மற்றும் முதல்வர் ஜெயலலிதாவின் வீடு முன்பு ஆயிரக்கணக்கில் அதிமுக தொண்டர்கள் திரண்டுள்ளனர். மேலும் கொண்டாட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் அதிமுக அலுவலகம் மற்றும் முதல்வர் ஜெயலலிதாவின் வீடு முன்பு விழாக்கோலம் பூண்டுள்ளது.
அடுத்த முதல்வர் "எங்கள் அம்மா" தான் என்று தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகி்ன்றனர்.
இனிப்புகள் வழங்கி வாழ்த்துகள் தெரிவிகின்றன தொண்டர்கள்.
தமிழக தேர்தலில் அதிமுக தொடர்ந்து முன்னிலை வகிப்பது மட்டுமல்லாமல் ஆட்சியையும் தக்க வைத்துகொள்ளும் என உறுதியான தகவல்கள் வருகின்றன.
செல்வி ஜெயலலிதா பேட்டி பற்றி:-
>வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை அதிமுகவுக்கு மக்கள் அளித்துள்ளனர்.
>தமிழக மக்களின் மீது நான் அளவற்ற நம்பிக்கை வைத்து உள்ளேன்.
>மக்கள் குரலே மகேசன் குரல்... தமிழக மக்கள் என்னை கைவிடவில்லை.
>தமிழக மக்களுக்கு நன்றி சொல்ல தமிழ் அகராதியில் வாரத்தையே இல்லை.
> என்னுடைய வாழ்வு முழுவதும் தமிழக மக்களுக்கு அற்பணிக்கப்பட்டது.
திருவாரூர் தொகுதியில் போட்டிட்ட திமுக முதலைமைச்சர் மு. கருணாநிதி அவர்கள் வெற்றி பெற்றுள்ளார்.
அவர் 68,366 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் பெற்ற மொத்த வாக்குகள் 1,21,473 ஆகும்.
இரண்டாவது இடத்தில் உள்ள அதிமுக வேட்பாளர் பன்னீர்செல்வம் 53,107 வாக்குகள் பெற்றுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக தொடர்ந்து முன்னிலை வகிப்பது மட்டுமல்லாமல் ஆட்சியையும் தக்க வைக்கிறது என்று உறுதியான தகவல் கிடைத்துள்ளது.
திமுகவுக்கு இரண்டாவது இடம் கிடைத்துள்ளது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
தமிழக தேர்தலில் அதிமுக தொடர்ந்து முன்னிலை வகிப்பது மட்டுமல்லாமல் ஆட்சியையும் தக்க வைத்து கொள்கிறது.
இதைகுறித்து செல்வி ஜெயலலிதா கூறியது:-
>தமிழக மக்களுக்கு நான் எப்போதும் நன்றி கடன் பட்டவளாக இருப்பேன்.
>உங்கள் வாக்குகளை அதிமுகவுக்கு போட்டு அமோக வெற்றி அடைய செய்ததுக்கு மனமாற வாழ்த்துகள்.
>மேலும் கட்சிக்காக உழைத்த நிர்வாகிகள் மற்றும் கழக தொண்டர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி தெர்வித்துகொள்கிறேன்.
>தோழமை கட்சிகளுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கையில் அதிமுக தொடர்ந்து முன்னணியில் இருந்து வருவதால் தொண்டர்கள் மகிழ்சியில் உள்ளனர்.
அதிமுக அலுவலகம் மற்றும் முதல்வர் ஜெயலலிதாவின் வீடு முன்பு ஆயிரக்கணக்கில் அதிமுக தொண்டர்கள் திரண்டுள்ளனர். மேலும் கொண்டாட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் அதிமுக அலுவலகம் மற்றும் முதல்வர் ஜெயலலிதாவின் வீடு முன்பு விழாக்கோலம் பூண்டுள்ளது.
சட்டமன்ற தேர்தல் தமிழகம் உட்பட புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களுக்கு நடந்து முடிந்தது.
தமிழகம் புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாகவும்..
அசாமில் 2 கட்டமாகவும், மேற்கு வங்காளத்தில் 6 கட்டமாகவும் தேர்தல் நடந்தது.
மேற்கு வங்காளத்தில் மொத்தம் 294 தொகுதிகள் உள்ளன. இதில் திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ், பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
சற்று முன் கிடைத்த தகவல் படி திரிணாமூல் காங்கிரஸ் முன்னிலை வகிக்கின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.