நீங்கள் UAE இல் துபாய் அல்லது ஷார்ஜா செல்ல திட்டமிட்டால். இந்த தகவல் உங்களுக்கு மிகவும் முக்கியமானது. நீங்கள் ஒரு சுற்றுலா விசாவில் துபாய் அல்லது ஷார்ஜா செல்ல திட்டமிட்டுள்ளீர்கள் என்றால், பயணத்தின் போது இதுபோன்ற பயணக் காப்பீட்டை நீங்கள் கொண்டிருக்க வேண்டும், அதுவும் சுகாதாரப் பாதுகாப்பைக் கொண்டுள்ளது. பயணிகளுக்கு இந்த தகவலை ஏர் இந்தியா (Air India) எக்ஸ்பிரஸ் வழங்கியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோயை மனதில் கொண்டு, பல நாடுகள் பயணிகளுக்காக பல வகையான விதிகளை வெளியிடுகின்றன.
அரசு நடத்தும் ஏர் இந்தியா (AIR INDIA) இந்தியாவில் இருந்து பாரிஸுக்கு 13 கூடுதல் விமானங்களை இயக்கும். விமான நிறுவனம் வந்தே பாரத் மிஷனின் (Vande Bharat Mission) கீழ் முன்பதிவு செய்யத் தொடங்கியுள்ளது. இந்த கூடுதல் விமானம் டெல்லி மற்றும் சென்னை இடையே பாரிஸ் வரை இயங்கும். கோவிட் -19 காரணமாக இந்தியர்களை கொண்டு செல்வதற்கான சேவையை ஏர் இந்தியா தொடங்கியுள்ளது. (ராய்ட்டர்ஸ்)
இந்திய அரசின் கீழ் செயல்படும் ஏர் இந்தியா (Air India) விமான நிறுவனம் 5 நாடுகளுக்கான விமான சேவையை நிறுத்த முடிவு செய்துள்ளது. விமான சேவையுடன் இந்த நாடுகளில் ஏர் இந்தியா தனது அலுவலகங்களை மூடியுள்ளது.
துபாயில் இருந்து தாயகம் திரும்புகிறோம் என்ற மகிழ்ச்சியுடம் விமானம் ஏறியவர்கள், தங்கள் சொந்த ஊருக்கு திரும்புகிறோம் என்ற மன நிம்மதியுடன் பயணத்தை தொடங்கினர்.
விபத்து குறித்து தொடர்ந்து நிலைமை குறித்து கண்காணித்து வருகிறார். அதிகாரிகள் சம்பவ இடத்தில் உள்ளனர். அனைத்து உதவிகளையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும்.
பயணிகள் அனைவரும் இந்த பயங்கரமான சோதனையிலிருந்து தப்பியிருக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன் என முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இந்த வருடம் இந்திய முஸ்லிம்கள், Haj பயணம் மேற்கொள்ள மாட்டார்கள் என மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி அறிவித்தார்.2020 ஆம் ஆண்டிற்கான, Haj பயணத்திற்காக, 2,13,000 மனுக்க வந்துள்ளதாகவும், இந்த மனுக்களுடன், மனுதாரர் செலுத்திய பணம் முழுவதுமாக, கழிவு ஏதும் இன்றி திருப்பி தரப்படும் என அவர் கூறினார்.
உள்நாட்டு விமான தடங்களில் (domestic flights) மேலும் விமானங்களை இயக்க Air India முடிவு செய்துள்ளது.பயணிகள் வசதிக்காக மேலும் பல உள்நாட்டு விமானங்களை இயக்க முடிவு செய்துள்ளதாக Air India ஜூன் 22 அன்று தனது ட்விட்டர் கணக்கில் கூறியுள்ளது.
வந்தே பாரத் மிஷனின் மூன்றாம் கட்டத்தின் கீழ், ஏர் இந்தியா (Air India) வெள்ளிக்கிழமை அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு சுமார் 300 விமானங்களை முன்பதிவு செய்யத் தொடங்கியது.
ஜூன் 11 முதல் ஜூன் 30 வரை மிஷன் வந்தே பாரத்தின் மூன்றாம் கட்டத்தின் கீழ் அமெரிக்கா மற்றும் கனடாவில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை வெளியேற்ற இந்திய விமான நிறுவனமான ஏர் இந்தியா லிமிடெட் 70 விமானங்களை இயக்கும் என்று சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி திங்கள்கிழமை பிற்பகல் ஒரு ட்வீட்டில் தெரிவித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.