12ம் வகுப்பு தேர்வு முடிந்தவுடன் 25 ஆயிரம் மாணவர்களுக்கு ஆடிட்டர் பயிற்சி அளிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்று கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
இன்று கோபியில் கீரிப்பள்ள ஓடை, ஈரோடை அமைப்பு சார்பில் தூர்வாரப்பட உள்ள நிகழ்ச்சியை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கலந்து கொண்டு பணியைத் துவக்கி வைத்தார். அதன் பின்னர் நிருபர்களிடம் அளித்த பேட்டியில்,
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோரின் தலைமையில் இந்த அரசு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.
இந்தியாவில் 2.85 லட்சம் ஆடிட்டர்கள் தான் உள்ளனர். அந்த வகையில் தமிழகத்தில் சிறந்த ஆடிட்டர்களை உருவாக்க 12ம் வகுப்பு தேர்வு முடிந்தவுடன் மாணவர்களுக்கு ஆடிட்டர் பயிற்சி அளிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதில், தமிழகத்தில் முதற்கட்டமாக 25 ஆயிரம் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
என அவர் தெரிவித்துள்ளார்.