பழைய ஓய்வூதிய திட்டம் வருமா?அதிருப்தியில் அரசு ஊழியர்கள்... ஸ்டாலின் போட்ட உத்தரவு?

Tamil Nadu News: தமிழ்நாடு அரசு அலுவலர் சங்கங்கள் தொடர்ந்து அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை வைத்து வரும் நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் இன்று முக்கிய அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார்.

Tamil Nadu News Latest Updates: பழைய ஓய்வூதிய திட்டத்தை (Old Pension Scheme) மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் கோரிக்கையாக உள்ளது. 2021ஆம் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என வாக்குறுதி அளித்தது குறிப்பிடத்தக்கது.

1 /8

பல்வேறு தமிழ்நாடு அரசு அலுவலர் சங்கங்களின் கோரிக்கைகளை பரிசீலித்து அவற்றின் மீது உரிய முடிவுகளை காணும் பொருட்டு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள் அடங்கிய ஒரு குழுவினை அமைத்து ஆணையிட்டுள்ளார்.

2 /8

இந்தக் குழுவில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் திருமதி கயல்விழி செல்வராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

3 /8

அரசு ஊழியர் சங்கங்களின் கோரிக்கைகள் குறித்து சங்க நிர்வாகிகளுடன் நாளை தலைமை செயலகத்தில், அமைச்சர்கள் அடங்கிய இந்த பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.  

4 /8

ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவோம் என திமுக அதன் 2021 தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்தது. இந்நிலையில், ஆட்சிப் பொறுப்பேற்று, நான்காண்டுகள் நிறைவடைந்தும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தாதது அரசு ஊழியர்கள் மத்தியில் கடும் கௌந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

5 /8

மேலும், புதிய ஓய்வூதிய திட்டம் குறித்து பரிந்துரை அளிக்க தமிழ்நாடு அரசு அதிகாரிகள் குழு அமைத்ததும் அரசு ஊழியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.   

6 /8

தேர்தல் வாக்குறுதியில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவோம் என வாக்குறுதி அளித்துவிட்டு, தற்போது புதிய ஓய்வூதிய திட்டம் குறித்து பரிந்துரை அளிக்க குழு அமைத்தது ஏமாற்றம் அளிக்கிறது என்றும் இதனால், இந்த குழுவுக்கு 9 மாதங்கள் காலக்கெடு வழங்கியிருப்பதால் பட்ஜெட்டில் அரசு ஊழியர்கள் எதிர்பார்க்கும் அறிவிப்புகள் வருவதற்கான வாய்ப்பே இல்லை என்ற சூழலை உருவாக்கியிருப்பதாகவும் அரசு ஊழியர்கள் தரப்பில் கூறப்படுகிறது. 

7 /8

இந்நிலையில், தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் உள்பட அரசு ஊழியர்கள் சங்கத்தினர் தமிழ்நாடு அரசு மீது அதிருப்தியில் இருப்பதால் அவர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து உரிய முடிவை எடுக்க அமைச்சர்கள் அடங்கிய குழு இன்று அமைக்கப்பட்டுள்ளது.

8 /8

இந்த அமைச்சர்கள் குழுவுடன் அரசு ஊழியர்கள் சங்கம் நாளை பேச்சுவார்த்தை நடத்த இருப்பதால், பேச்சுவார்த்தை வெற்றி பெற்றால் 2025-26 பட்ஜெட்டிலேயே அரசு ஊழியர்கள் எதிர்பார்க்கும் அறிவிப்புகள் வெளியாகலாம்.