சுக்கிரன் வக்ர பெயர்ச்சி: ஆடம்பர வாழ்க்கை, செல்வம், வளம் ஆகியவற்றை அள்ளிக் கொடுக்கும் சுக்கிரன் வலுவிழந்தால், நிதி பற்றாக்குறை, குடும்பத்தில் பிரச்சனை என பல சிக்கல்களை சந்திக்க நேரிடும்.
சுக்கிரனின் சஞ்சாரம், சில ராசிகளுக்கு சுப பலன்களையும், சில ராசிகளுக்கு அசுப பலன்களையும் கொடுக்கக்கூடியது. பொதுவாக ஒரு கிரகம் வக்ர நிலையை அடையும் போது, அதன் சுப பலன்கள் அசுப பலன்கள் இரண்டுமே இரட்டிப்பாகும் என்கின்றனர் ஜோதிடர்கள்.
சுக்கிரன் வக்கிர பெயர்ச்சி: பொதுவாக சுக்கிரன், செல்வ வளங்களையும் ஆடம்பர வாழ்க்கையும், அழகான தோற்றத்தையும் அள்ளிக் கொடுக்கும் கிரகமாக கருதப்படுகிறது. எனினும், சில சமயங்களில், எதிர்மறை பலன்களை கொடுத்து, வாழ்க்கையில் சிக்கல்களை உண்டாக்கும். அதிலும் வக்கிரப் பெயர்ச்சி காலத்தில், அதன் பலன்கள் கடுமையாக இருக்கும்.
சுக்கிரன் வரும் மார்ச் மாதம் 2-ம் தேதி, காலை 5:12 மணிக்கு மீன ராசியில் வக்ர நிலையை அடைகிறார். இதனால் சில ராசிகள் மார்ச் மாதத்தில் சிக்கலை சந்திப்பார்கள். இந்நிலையில், பிரச்சனையை எதிர்கொள்ளும் , ராசிகள் எவை என்பதையும், கெடுபலன்களை குறைக்க செய்ய வேண்டிய பரிகாரங்கள் குறித்தும் அறிந்து கொள்ளலாம்.
ரிஷப ராசி: உடல்நலம் பாதிக்கப்படலாம். நிதி ரீதியாக பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகளால் மனம் சஞ்சலம் அடையும். வேலையில் பலவித சவால்களை எதிர்கொள்ள நேரிடும். செலவுகளை கட்டுப்படுத்துவது அவசியம்.
கடக ராசி: பணியில் இருப்பவர்களுக்கு உயர் அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். உறவுகளில் பதற்றங்களை நீடிக்கும். குடும்பத்தில் உள்ளவர்களின் உடல்நிலை பாதிப்பால் செலவுகளும் மனக்கவலையும் அதிகரிக்கும். வாதத்துக்கு வாதங்களை தவிர்ப்பதால் பிரச்சனைகள் குறையும்.
சிம்ம ராசி: முயற்சிகளுக்கு ஏற்ற பலன் கிடைக்காமல் மன உளைச்சல் ஏற்படும். பண வரவு குறைவதாலும் செலவு அதிகரிப்பதாலும், கடன் வாங்கும் நிலை ஏற்படக்கூடும். உடல் நலம் பாதிப்பது பிரச்சனைகளை மேலும் அதிகரிக்கும். குடும்பத்தில் சிறிது நிம்மதியற்ற சூழ்நிலை நிலவும்.
கன்னி ராசி: வாழ்க்கையில் பல்வேறு வகையில் சிக்கல்கள் சந்திக்க நேரிடும். உடல் ஆரோக்கிய பாதிப்பு, மோசமான நிதிநிலை, குடும்ப உறவின் கருத்து வேறுபாடு என பல சவால்களை சந்திக்க நேரிடும். அலுவலக வேலைகளும் பணி சுமை அதிகம் இருக்கும். மன அழுத்தம் அதிகம் ஏற்படும்.
விருச்சிக ராசி: உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம் என்பதால், கூடுதல் கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. அலுவலகப் பணியில் இருப்பவர்களுக்கு, உடன் வேலை செய்பவர்களிடம் இருந்து ஒத்துழைப்பு கிடைக்காமல், மன உளைச்சல் ஏற்படும். வருமானம் குறைவதால் நிதி ரீதியாக சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும்.
சுக்கிரன் பரிகாரங்கள்: கெடு பலன்களில் இருந்து தப்பிக்க, வெள்ளிக்கிழமைகளில் லட்சுமி தேவியை வணங்கி, ஏழைகளுக்கு அன்னதானம் செய்வது பலன் தரும். பகவான் விஷ்ணுவை வழங்குவதும், பெருமாள் கோவிலுக்கு வழக்கமாக செல்வதும், சிக்கல்கள் தீர உதவும். குபேர எந்திரத்தை உங்கள் பார்சல் வைத்துக் கொள்வது நிதி சிக்கல்கள் தீர உதவும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.