Income Tax Rules: இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் வருமான வரி தொடர்பான புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதன் மூலம் அதிக மக்கள் பலனடைய உள்ளனர்.
ஆண்டு வருமானம் ரூ. 12 லட்சம் வரை பெறுவோருக்கு இனி வருமான வரி செலுத்த தேவையில்லை என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பின் மூலம் மாத வருமானம் ரூ.1 லட்சம் வரை பெறக்கூடியவர்கள் அதிகம் பலனடைய உள்ளனர். அவர்கள் இனி வரி கட்ட தேவையில்லை.
ஆண்டு வருமானமாக ரூ.12 லட்சம் பெறுவோர் ரூ.80,000 வரை வரிச்சலுகை பெற்று கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும் வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்வதற்கான கால வரம்பு 2 ஆண்டில் இருந்து 4 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.
மூத்த குடிமக்களுக்கான வட்டியின் மீதான வருமான வரி பிடித்த வரம்பு ரூ.50,000-ல் இருந்து ரூ.1லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
வீட்டு வாடகைக்கான வரிக்கழிவு ரூ.2.40 லட்சத்தில் இருந்து ரூ.6 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் வருமான வரி விதிப்பு எளிமைப்படுத்தப்படும் என பட்ஜெட்டில் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.