மத்திய பட்ஜெட் 2025: எந்தெந்த பொருட்களின் விலை உயர்கிறது, குறைகிறது.. லிஸ்ட் இதோ

2025-26 நிதி அண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று (பிப்ரவரி 01) தாக்கல் செய்யப்பட்டது. 

Written by - R Balaji | Last Updated : Feb 1, 2025, 01:40 PM IST
  • மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது
  • மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்
  • எந்தெந்த பொருட்களின் விலை உயர்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்
மத்திய பட்ஜெட் 2025: எந்தெந்த பொருட்களின் விலை உயர்கிறது, குறைகிறது.. லிஸ்ட் இதோ title=

Union Budget 2025: பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே 2025-26 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்ரவரி 01) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். சரியாக 11.02 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்ய தொடங்கி மதியம் 12.17க்கு பட்ஜெட்டை தாக்கல் செய்து முடித்தார். 

இந்த மத்திய பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு ஆந்திராவுக்கு முக்கியத்துவம் கொடுத்த நிலையில், இந்த ஆண்டு பீகார் மாநிலத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், பட்ஜெட்டில் விலை உயரும் மற்றும் குறையும் பொருட்கள் குறித்த அறிவிப்பும் வெளியாகி உள்ளது. அந்த பொருட்கள் என்னென்ன? எந்த பொருட்கள் எல்லாம் விலை உயர்கிறது எந்த பொருட்கள் எல்லாம் விலை குறைகிறது என்பதை இங்கு பார்க்கலாம். 

மேலும் படிங்க: Union Budget 2025: பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு அறிவிப்புகள் இருக்கா? மீண்டும் கல்தாவா?

விலை குறையும் பொருட்கள்

2025-26 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் எலக்ட்ரானிக்ஸ், மருத்துவ காப்பீடு, ஆயுள் காப்பீடு, எலக்ட்ரிக் கார்கள் மற்றும் 3 சக்கர வாகனங்களின் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. 

அதன்படி 37க்கும் அதிகமான மருந்துகளின் மீதான அடிப்படை சுங்க வரி குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மருந்துக்களின் விலை குறைகிறது. அதேபோல் புற்றுநோய் மற்றும் பிற அரிய நோய்களுக்கான 36 மருந்துகளுக்கும் அடிப்படை சுங்க வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதால் அதன் விலையும் குறைய உள்ளது. 

இதுதவிர ஈயம், துத்தநாகம் மற்றும் 12 பிற தாதுக்களுக்கு அடிப்படை சுங்க வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இதனால் அதன் விலையும் குறைகிறது. அதேபோல் கப்பல் கட்டுமானத்திற்கான மூலப்பொருட்களுக்கு தற்போது கூடுதலாக 10 ஆண்டுகளுக்கு அடிப்படை சுங்க வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கடல் பொருட்களுக்கு அடிப்படை சுங்க வரி 35இல் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 

விலை உயரும் பொருட்கள்

Interactive flat panel display அடிப்படை சுங்க வரி என்பது 10 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக உயர்த்த நிதி அமைச்சர் முன்மொழிந்தார். இதனால் வரி என்பது அதிகரிக்கப்பட உள்ளது. மேலும், தற்காலிக மதிப்பீட்டிற்கான கால வரம்பை இரண்டு ஆண்டுகளாக நிர்ணயிக்கவும் முன்மொழிந்தார். 

2024ஆம் ஆண்டில், பிளாஸ்டிக்களுக்கான சுங்க வரியை 25 சதவீதமாக உயர்ந்த மத்திய அரசு முன்மொழிந்தது. குறிப்பிட்ட தொலைத்தொடர்பு உபகரணங்களுக்கான அடிப்படை சுங்க வரியும் 10 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக அதிகரித்தது. இதனால் அதன் விலை அதிகரிக்க தொடங்கி உள்ளது. 

மேலும் படிங்க: பட்ஜெட் 2025: மகளிருக்கான மாஸ் திட்டம்! 5 லட்சம் வரை குறைந்த வட்டி கடன்-தகுதி என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News