ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து இன்று மாலை 5.28 மணிக்கு, மாக் 3 டி1 ராக்கெட் மூலம் ஜி சாட்-19 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட உள்ளது.
இந்த ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டால், மனிதனை விண்ணுக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இஸ்ரோவின் கனவும் விரைவில் சாத்தியமாகும் என எதிர்பாரக்கப்படுகிறது.
இந்நிலையில் ஜி சாட் செயற்கைக்கோளின் 10 முக்கிய அம்சங்கள்:-
> ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் ஏவப்படும் அதிக எடைகொண்ட செயற்கைக்கோள் ஜிசாட் 19 ஆகும்
ஜிஎஸ்எல்வி மாக் 3 டி1 ராக்கெட் மூலம் ஜி சாட்-19 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதற்கான கவுன்ட்டவுன் நேற்று தொடங்கியது.
ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து இன்று மாலை 5.28 மணிக்கு, மாக் 3 டி1 ராக்கெட் மூலம் ஜி சாட்-19 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட உள்ளது. இதற்கான 25 மணி நேர கவுன்டவுன் நேற்று மாலை 3.58 மணிக்கு துவங்கியது.
இஸ்ரோவால் முழுவதும் உள்நாட்டிலேயே கிரையோஜெனிக் தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட இந்த ராக்கெட், ஜிசாட்-19 செயற்கைக்கோளை விண்ணில் நிலைநிறுத்த உள்ளது. 3,136 கிலோ எடை கொண்ட இது, இணைய தொலைத்தொடர்பு செயற்கைகோள் ஆகும்.
ஆந்திரா பிரதேஷ மாநிலத்தின் அமைச்சர் நாராயணாவின் மகன் நிஷிடா இன்று நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார்.
ஜூப்லி மலைப்பகுதியில் நண்பர் ராஜாவிடம் நிஷிடம் சென்ற கார் சாலையோரத்தில் இருந்த மெட்ரோ ரயில் பாலத்தின் தூண் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் அமைச்சர் நாராயணாவின் மகன் நிஷிடா மற்றும் அவரது நண்பர் ராஜாவும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் செம்மரம் வெட்டச்சென்றதாக 174 தமிழர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ஆந்திரப் பிரதேசத்தின் காஜூபேட்டையில் செம்மரம் வெட்டச்சென்றதாக 16 தமிழர்கள் கைதுசெய்யப்பட்டனர். அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்பனையில் லங்கமல்லாவில் 158 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மொத்தம் 174 தமிழர்கள் செம்மரம் வெட்டச்சென்றதாக குற்றம்சாட்டப்பட்டு, ஆந்திர செம்மரக்கடத்தல் தடுப்புப்பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 10 டன் செம்மரம், 2 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
ஆந்திரா வழியாக ஒடிசாவை நோக்கிச் சென்று கொண்டிருந்த விரைவு ரயில் ஒன்று, திடீரென தடம்புரண்டதில், 26 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
அங்குள்ள குனேரு ரயில்நிலையம் அருகிலேயே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது ஒடிசாவை ஒட்டிய ஆந்திர எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. இவ்வழியாக, நேற்று நள்ளிரவு ஜக்தால்புர் புவனேஸ்வர் விரைவு ரயில் சென்றுகொண்டிருந்தது.
திடீரென ரயில் என்ஜீன், சரக்குப் பெட்டி, ஏசி பயணிகள் பெட்டி, ஜெனரல் பெட்டிகள் உள்ளிட்டவை தடம்புரண்டன. இதில், 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
வங்கக் கடலில் உருவாகி உள்ள "வர்தா' புயல் அதிதீவிர புயலாக மாறி உள்ளது. இந்தப் புயல் இன்று பிற்பகல் சென்னை கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்தப் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யும். ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
புயல் சென்னைக்கு அருகில் கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் சரஸ்வதி சுவாமிகள் உடல் நலக்குறைவு காரணமாக விஜயவாடா ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
சந்துரு விரதம் தொடர்பாக ஜெயேந்திரர் சுவாமிகள் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் தங்கி இருந்து வருகிறார். அவருக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து சீடர்கள் அவரை விஜயவாடாவில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.
அவருக்கு சர்க்கரை அளவு குறைந்ததாகவும், தற்போது அவரது உடல், நலமாக இருப்பதாகவும் டாக்டர்கள் கூறியுள்ளனர், தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இறந்த பசுவின் தோலை அகற்றியதற்காக இரண்டு தலித் சகோதரர்களை தென்னை மரத்தில் கட்டிவைத்த கொடூர சம்பவம் ஆந்திராவில் அரங்கேறியுள்ளது. குஜரத்தில் இதே போன்ற சம்பவம் நடைபெற்று மிகப்பெரும் அதிர்வலைகளை நாடு முழுவதும் ஏற்படுத்தி ஒரு சில வாரங்களே ஆகியிருந்த நிலையில் மீண்டும் இதேபோன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்கக்கோரி முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
ஒருங்கிணைந்த ஆந்திராவில் இருந்து தெலுங்கானா மாநிலம் பிரிக்கப்பட்டு ஓராண்டு கடந்துவிட்டது. இதனிடையே ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பார்லிமென்டிலும் ஆந்திர எம்.பி.,க்கள் வலியுறுத்தினர்.
ஆந்தர பிரதேஷ் குன்டூரில் உள்ள ஜிவல்லர்ஸ் கடையில் ஒரு குரங்கு நுழைந்தது. 20 நிமிடம் வரை தொந்தரவு செய்தது. அங்கு வேலைசெய்யும் அதிகாரிகள் அதை துரத்திவிட மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன. அதற்கு சாப்பிட உணவுகள் தரப்பட்டது. ஆனாலும் குரங்கு அங்கிருந்து வெளியே செல்லவில்லை.
கடைசியாக குரங்கு நேரா பணம் வைத்திருக்கும் கவுண்டருக்குள் நுழைந்து அங்கிருந்து 1௦ ஆயிரம் பணத்தை எடுத்துகொண்டு கடையில் இருந்து வெளியேறுகிறது.
தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டு இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
ஆந்திர மாநிலத்தை இரண்டாகப் பிரித்து தெலுங்கானா என தனி மாநிலம் உருவாக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக இருந்தது. இந்தக் கோரிக்கைக்காக எத்தனையோ போராட்டங்கள் நடைபெற்றன. தற்போதைய முதலைமைச்சர் சந்திரசேகரராவ் 2௦௦1-ம் ஆண்டு தெலுங்கானா ராஷ்ட்டிர சமிதி என்ற கட்சித் தொடங்கி தெலுங்கானா தனி மாநிலம் வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து போராட்டங்கள் நடந்தினார். இதற்காக உண்ணாவிரதங்கள் இருந்தார் என்பது குறிபிடத்தக்கது.
கடந்த மே 20ம் தேதி ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள காஜிகுடம் கிராமத்தில் 14 வயது சிறுமி 6 நபர்கள் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.
கடந்த மே 20ம் தேதி ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள காஜிகுடம் கிராமத்தில் 14 வயது சிறுமி 6 நபர்கள் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.