Kudumbasthan OTT Release : மணிகண்டன் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற குடும்பஸ்தன் திரைப்படம் தற்போது ஓடிடியில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Kudumbasthan OTT Release : தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் ஹீரோவாக இருப்பவர், மணிகண்டன். இவரது நடிப்பில் வெளியான குட் நைட், லவ்வர் உள்ளிட்ட படங்கள் வெற்றி பெற்றதை தொடர்ந்து குடும்பஸ்தன் படமும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த படத்தில் அவர் ஒரு நடுத்தர ஆணாக நடித்திருக்கிறார். இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது. இது குறித்து, இங்கு பார்ப்போம்.
அனைவருக்கும் கனெக்ட் ஆகக்கூடிய கதாப்பாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார், மணிகண்டன். இவர், கூடிய விரைவில் தமிழ் திரையுலகில் பெரிய ஆளாக வருவார் என ரசிகர்கள் பேசிக்கொள்வதுண்டு.
மணி நடித்திருந்த குடும்பஸ்தன் திரைப்படம், கடந்த ஜனவரி மாதம் 24ஆம் தேதி வெளியானது. இந்த படம் வெளியாவதற்கு முன்னர் இதன் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. காரணம், மணிகண்டன் முன்னர் தேர்ந்தெடுத்து நடித்திருந்த படங்கள்தான்.
குட்நைட், லவ்வர் உள்ளிட்ட படங்களுக்கு பிறகு அவர் ராஜேஸ்வர் காலிசாமி இயக்கிய குடும்பஸ்தன் படத்தில் கமிட் ஆனார். இந்த படத்தில் குரு சோமசுந்தரம், ஆர்.சுந்தர்ராஜன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.
குடும்பஸ்தன் படம் வெளியாகி, 11 நாட்களை கடந்திருக்கும் நிலையில், இப்படத்திற்கு ரசிகர்கள் பெரும் வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.
இந்த படம், உலகளவில் மொத்தம் 17 கோடி கலெக்ட் செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.
குடும்பஸ்தன் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. இது எந்த தளத்தில் வெளியாகும் தெரியுமா?
குடும்பஸ்தன் படத்தை, பிப்ரவரி 28ஆம் தேதி ஜீ 5 தளத்தில் பார்க்கலாம் என திரை வட்டாரங்களில் பேசப்படுகிறது. ஆனால், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.