2025 ஐபிஎல் தொடங்க உள்ள நிலையில் தோனி சொன்ன முக்கிய விஷயம்! இணையத்தில் வைரல்!

ஐபிஎல் 2025 போட்டிகள் வரும் ஆர்ச் 22ஆம் தேதி தொடங்க உள்ளது. இதற்கான அட்டவணையை சமீபத்தில் பிசிசிஐ வெளியிட்டது. முதல் போட்டியில் கொல்கத்தா - ஆர்சிபி விளையாட உள்ளது.

1 /6

கடந்த 2019 ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த தோனி ஐபிஎல் தொடர்களில் மட்டும் விளையாடி வருகிறார். கடந்த ஆண்டு சென்னை அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகினார்.

2 /6

2011 ஒருநாள் உலகக்கோப்பை, 2007 டி20 உலக கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி தொடர் என 3 ஐசிசி கோப்பைகளை இந்தியாவிற்கு வென்று கொடுத்துள்ளார் தோனி.

3 /6

நான் 2019-ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றேன். என்னால் முடிந்தவரை கிரிக்கெட்டில் ஆடுவேன். நான் இந்த தருணத்தை மிகவும் மகிழ்ச்சியாக அனுபவிக்கிறேன் என்று தோனி சமீபத்திய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

4 /6

ஒரு கிரிக்கெட் வீரர் நாட்டிற்காக விளையாடுவதற்கு பெருமைப்பட வேண்டும். நாங்கள் ஒவ்வொரு நாட்டிற்கும் விளையாடச் செல்லும்போது இந்தியாவிற்காக விளையாடுகிறோம் என்ற பெருமை இருக்கும் என்று பேசியுள்ளார்.

5 /6

உங்களுக்கு எது நல்லது எது கெட்டது என்பதை தெரிந்திருக்க வேண்டும். நாம் விளையாடும் கிரிக்கெட் நமக்கு முழு திருப்தியை அளிக்கிறதா என்பதை உணர வேண்டும், வேறு எதுவும் முக்கியமில்லை எனவும் பேசியுள்ளார்.  

6 /6

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய கேப்டனாக ருதுராஜ் கைகுவாட் உள்ளார். தோனி அவருக்கு பின்னால் இருந்து வேண்டிய குறிப்புகள் மட்டும் கொடுத்து வருகிறார்.